முதியோர் பென்சன் வழங்குவதில் அதிமுக அரசு முறைகேடு செய்வதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்று (ஜனவரி 6) மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற மக்கள் சபை கூட்டத்தில், மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று பேசியுள்ளார்.
அப்போது, முதியோர் பென்சன் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் – நடவடிக்கை எடுக்க திமுக மனு
“லஞ்சத்திற்காகவும் ஊழலுக்காகவும் மட்டுமே உள்ளாட்சி தேர்தலை இந்த அரசு நடத்தாமல் இருக்கிறது. மக்கள் பிரதிநிதி ஒருவரிடம் கூட கலந்தாலோசிக்காமல் ரூ 1280 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை மிக மோசமான முறையில் நடத்தி வருகின்றனர்.” என்று பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார்.
மேலும், “முதியோர் பென்சன் திட்டத்தை பொறுத்தவரை ஒரு பயனாளி இறந்தால் மட்டுமே மற்றொரு பயனாளி பயனடைவோர் பட்டியலில் சேர்க்கப்படுகிறார். இது அதிமுக அரசின் எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. ஏனென்றால் இவர்கள் தமிழக அரசின் நிதி நிலையை திவாலாக்கிவிட்டார்கள் .” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
’நான் ஏ டீம்; ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு சொல்கிறேன் – கமல்ஹாசன் ஆவேசம்
இதுவரை மதுரை மத்திய தொகுதியில் மட்டும் 480 மனுக்கள் முதியோர் உதவி தொகைக்காக சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் பரிந்துரை செய்து மாவட்ட நிர்வாகத்திடம் அளித்துள்ளேன் என்றும் ஆனால் 25 பயனாளிகளுக்கு மட்டுமே முதியோர் உதவித்தொகை கிடைத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.