Aran Sei

‘மதுரை வீதியில் படகு ஓட்டலாம்; மாநகரின் நடுவில் ஒரு குளம்’ – ஸ்மார்ட் சிட்டி குறித்து பழனிவேல் ராஜன்

ழை பெய்தால் மக்கள் படகு ஓட்ட வேண்டிய நிலையில் தான் மதுரை வீதிகள் இருக்கிறன என்றும்  மாநகரின் நடுவில் குளத்தை அமைப்பது தான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் லட்சணம் என்றும் திமுக-வை சேர்ந்த மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனிவேல் ராஜன் விமர்சித்துள்ளார்.

நேற்று (ஜனவரி 7), அவர் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற மக்கள் சபை கூட்டத்தைத் தலைமை தாங்கி பேசியுள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அரசுக்கு விருப்பமில்லையா? – உயர் நீதிமன்றம் கேள்வி

அப்போது, “மதுரை மாநகராட்சியில் 1280 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறன. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிடம் ஆலோசிக்கபடாமல், வெறும் ஊழலுக்காக மட்டுமே இவை நடத்தப்படுகிறன” என்று அவர் குற்றஞ்சாடிள்ளார்.

“மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி நன்றாக இருந்த பேவர் பிளாக் கற்களை அகற்றி கருங்கல் பதிப்பதாகச் சொல்லி, அதை அலங்கோலப்படுத்தி விட்டார்கள். கீழ ஆவணி மூல வீதியில் மழை பெய்தால் மக்கள் படகு ஓட்ட வேண்டிய நிலையில்தான் இருக்கிறது.  மதுரை மாநகரின் நடுவில் குளத்தை அமைப்பது தான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் லட்சணமா?” என்று பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பினார்.

மதுரை எய்ம்ஸ் : மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை – சீ. நவநீத கண்ணன்

மேலும், “கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அம்மையார் ஜெயலலிதா மோடியா லேடியா என்று கேட்டார். அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு, 1 .1 சதவிகித வித்தியாசத்தில் அதிமுகவிற்கு வெற்றியும் கிடைத்தது.” என்று அவர் நினைவுப்படுத்தியுள்ளார்.

“ஆனால் 6 மாதங்களில் ஜெயலலிதா இறந்துவிட்டார். அதற்குப் பிறகு ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர்கள் ’டாடி டாடி’ என்று மத்தியில் உள்ளவர்களுக்கு அடிமையாகி தமிழகத்தை சீரழித்து விட்டார்கள் .” என்று பழனிவேல் தியாகராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘கருவூலத்தைக் காலி செய்த அரசு; கடன் வாங்கி பொங்கல் பரிசு’- பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் குற்றச்சாட்டு

மேலும், “எங்கேயோ ஒரு மூலையில் இருந்து கொண்டு இருந்தவர்களுக்கு வாழ்வளித்து பொது வாழ்விற்கு அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா. நீட் ,உதய் மின் திட்டம் ,ஜி எஸ் டி என்று அவர் எந்த திட்டங்களை எல்லாம் வேண்டாம் என்று சொன்னாரோ அத்தனைக்கும் கையெழுத்து போட்டு அதிமுக அமைச்சர்கள், அவருக்கு  துரோகம் செய்து விட்டார்கள். தமிழக அரசின் கடன் தொகையை 5 லட்சம் கோடியாக ஏற்றி தமிழக கஜானாவை திவாலாக்கி விட்டார்கள்.” என்று மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்