Aran Sei

’பாஜகவுடன் அதிமுக கூட்டணியை அறிவித்த நாளே, எங்கள் வெற்றி உறுதியாகி விட்டது’ – ப.சிதம்பரம்

ரும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில், பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்துள்ளதால், திமுக கூட்டணியின் வெற்றி உறுதி என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஜனவரி 3), புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது,   “வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று அதிமுக அறிவித்த நாளன்றே திமுக கூட்டணியின் வெற்றி உறுதியாகி விட்டது.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு – திமுக கூட்டணி தடையை மீறி உண்ணாவிரதம்

மேலும், “சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சுமார் 100 நாட்களே உள்ளன, தினமும் கடினமாக உழைத்தால் 200 தொகுதிகளை திமுக கூட்டணி எளிதாக கைப்பற்றிவிடலாம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் செம்மொழி நிறுவனத்தை பற்றி கூறுகையில், “காங்கிரஸ் ஆட்சியில்தான் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. மேலும், தமிழ் செம்மொழி நிறுவனத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிறுவனத்தை மைசூரில் உள்ள பன்மொழி நிறுவனத்தோடு இணைக்கும் பாஜக அரசின் முடிவை ஏற்கமுடியாது.” என்று ப சிதம்பரம் கூறியுள்ளார்.

தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் – எடப்பாடி பழனிசாமி

ரஜினிகாந்தின் அரசியல் கட்சி பற்றிய  முடிவைப் பற்றி குறிப்பிடுகையில், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்ற முடிவை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்..

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்