ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒரே கட்சி ஆட்சியில் தொடர்ந்தால் அரசு அதிகாரிகள் கரை வேட்டி கட்டாத கட்சிக்காரர்களாக மாறிவிடுவார் என்று மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
நேற்று (ஜனவரி 9) அவர் சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடியில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசியுள்ளார்.
‘முதியோர் பென்சன் திட்டத்தில் அதிமுக முறைகேடு ’ – பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு
அப்போது, “ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் நடைபெற வேண்டும். கேரள மாநில மக்கள் புத்திசாலிகள். 5 ஆண்டுகளுக்கு மேல் அவர்கள் எந்தக் கட்சியையும் ஆட்சி செய்ய விடுவதில்லை. காரணம், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒரே கட்சி ஆட்சியில் தொடர்ந்தால், அந்த அரசு அதிகாரிகள் கரை வேட்டி கட்டாத கட்சிக்காரர்களாக மாறிவிடுவர்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் போராட்டத்தை பற்றி கூறுகையில், “கடும் குளிரில் 40 நாட்களுக்கு மேலாகப் போராடும் விவசாயிகளின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்க மறுக்கிறது. மத்திய, மாநில அரசுகள் தாங்கள் சொல்வதுதான் சட்டம் என்பது போல் ஆட்சி செய்கின்றனர். பிரதமர் கிஸான் திட்டத்தில் பல பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது வழியாக ஊழல் நடந்துள்ளதை நாம் அறியலாம்.” என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
’பாஜகவுடன் அதிமுக கூட்டணியை அறிவித்த நாளே, எங்கள் வெற்றி உறுதியாகி விட்டது’ – ப.சிதம்பரம்
எடப்பாடி பழனிசாமி அரசு செலவிலும், பன்னீர்செல்வம் கட்சி செலவிலும் விளம்பரங்கள் செய்கின்றனர் என்றும் இது எங்கே போய் நிற்க போகிறது என்பது இன்னும் 3 மாதங்களுக்குப் பிறகு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ஏழைகளின் வாழ்வாதாரத்தை யார் பறிக்கிறார்களோ, அவர்கள் ஆட்சி செய்யத் தகுதியற்றவர்கள். அவர்கள் ஆட்சியிலே இருக்கக்கூடாது. தட்டுத்தடுமாறி 5 ஆண்டுகளை அதிமுக கடத்திவிட்டது’’என்று அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.