Aran Sei

ஒன்றிணைந்த 2000 செவிலியர்கள்: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னையில் போராட்டம்

அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தற்காலிக செவிலியர்கள் 2000-க்கும் மேற்பட்டோர் சென்னை மெரினாவில் உள்ள எழிலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணி நிரந்தரம் மற்றும் சமமான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2014ஆம் ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குச் செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் இரண்டு ஆண்டுப் பணி காலம் முடிந்த பின்னர், பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அரசு அறிவித்தது. ஆனால் தற்போது வரை 2 ஆயிரம் செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள மற்ற செவிலியர்களுக்கும், கோரோனா பணிக்காகத் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காகப் பல்வேறு போராட்டங்களை அவர்கள் நடத்தி உள்ளனர்.

’ஆர்எஸ்எஸ்காரர்களை போராட்டத்திற்குள் அனுப்பி, மத்திய அரசு வன்முறையை தூண்டுகிறது’ – விவசாயிகள் குற்றச்சாட்டு

தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் உறுப்பினர் அரண்செய் – யிடம் பேசினார் அதில்,”தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2014ஆம் ஆண்டு 7 ஆயிரத்து 500 செவிலியர்களும், அதனைத் தொடர்ந்து தற்போது வரை 14 ஆயிரம் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகள் பணி முடிந்தவுடன் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அரசு அறிவித்தது. ஆனால் தற்போது வரை 2ஆயிரம் செவிலியர்கள் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

’சிறைபடுத்தப்பட்ட கலைஞர்களுக்கும், அதிகாரத்தின் செல்லப்பிராணிகளுக்குமான நாடாக இந்தியா மாறும்’ – நகைச்சுவைக்கலைஞர் குணால் கம்ரா

மேலும், ”2017ஆம் ஆண்டு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்திச் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டம் நடத்தினோம். அப்பொழுது பேச்சுவார்த்தை நடத்தி பணி நிரந்தரம் செய்வதாகத் தமிழக அரசு உறுதி கொடுத்த்து, ஆனால் இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை. 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பலர் ஒப்பந்த ஊழியர்களாகவே இருக்கிறோம். தற்போது குறந்தபட்ச செவிலியர்களை மட்டுமே பணி நிரந்தரம் செய்ய முடியும் என்று அரசு கூறுவதை ஏற்க முடியாது. இதனால் அரசின் கவணத்தை கோருவதற்காக இப்போராட்ட்த்தில் ஈடுபட்டுள்ளதாக” கூறினார். மேலும், அரசின் நடவடிக்கை பொறுத்து இந்தப் போராட்டம் தொடர் போராட்டமாக மாறும் என அரண்செய்– யிடம் தெரிவித்தார்.

போக்சோ சட்டத்திற்கு புதிய விளக்கமளித்த நீதிபதி: மீண்டும் சர்ச்சையில் மும்பை உயர்நீதி மன்றம்

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்ட்த்தில் ஈடுபட்டுள்ளதால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்