Aran Sei

”போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, மாஃபியாக்கள்” – தமிழக பாஜக

டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் இல்லை. மாஃபியாக்கள் காசு கொடுத்து சேர்த்த கூட்டம் என்று பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் இராம.சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாஜகவின் மாநில பொதுச் செயலாளரும் மதுரை மண்டல பொறுப்பாளருமான சீனிவாசன் இன்று (டிசம்பர் 11) திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.

விவசாயிகளின் ‘பாரத் பந்த்’ – நாடு முழுவதும் பெருகிய ஆதரவு

மத்திய அரசு நிறைவேற்றிய விவசாயச் சட்டங்கள் குறித்த விரிவான விளக்கம் அளித்த பின் பேசியவர், ”விவசாயச் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்துபவர்கள் யாரும் விவசாயிகள் அல்ல. அவர்கள் மாஃபியாக்களின் தூண்டுதலினால் ஒன்று சேர்ந்த கூட்டம். இந்த விவசாயச் சட்டங்கள் முழுமையாக விவசாயிகளுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

விவசாய நிலங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களால் அபகரிக்கப்படும் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு திமுகவால் பரப்பப்பட்ட பொய்யான தகவல் என்றும் தமிழகத்தில் திமுக மீதுதான் அதிக அளவில் நிலம் கையகப்படுத்தப்பட்ட புகார்கள் நிறைய உள்ளன என்றும் விமர்சித்துள்ளார்.

பாரத் பந்த் : கடலில் இறங்கி போராட்டம் செய்த மீனவர்கள்

”தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற இருந்த ’பாரத் பந்த்’ மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. அதற்குக் காரணம் தமிழக விவசாயிகளுக்கு நன்றாகவே இந்தச் சட்டம் குறித்த அறிவும் ஞானமும் இருக்கிறது.” என்று கூறியுள்ளார்.

”திமுக தேர்தல் அறிக்கையில் இந்தப் புதிய விவசாயச் சட்டங்களைக் கொண்டு வரவேண்டும் என்று தேர்தல் பரப்புரையில் அவர்களே முன்வைத்தார்கள். இன்று அவர்களே அதற்கு எதிராகப் போராட்டம் நடத்துவது என்பது விவசாயிகளை ஏமாற்றுவதாகும்.” என்று கண்டித்துள்ளார்.

விவசாயிகள் அழைப்புவிடுத்த முழு அடைப்பு – ஒன்றிணையும் தமிழகக் கட்சிகள்

”இந்த மாதம் 8-ம் தேதி முதல் விவசாயிகளின் ’நண்பன் மோடி’ என்ற ஒரு அமைப்பை தொடங்கி தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து இந்த விவசாயச் சட்டங்கள் குறித்தும் மத்திய அரசினுடைய திட்டங்கள் குறித்தும் நேரில் அவர்களுக்கு விளக்கி வருகிறேன். கடந்த 8-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கிய இந்த அமைப்பு, இந்த மாதம் இறுதி வரை இந்தப் பணிகளை நடத்தும்.” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஒருபோதும் இந்த விவசாயச் சட்டங்களை திரும்பப் பெறப் போவதில்லை என்றும் அதைக் குறித்த அனைத்து விளக்கங்களும் அந்தந்த மொழிகளில் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துச் சொல்லப்படும் என்றும் கூறியுள்ளார்.

விவசாயிகள் போராட்டம் : கைக்கோர்த்த லாரி உரிமையாளர்கள் சங்கம்

மேலும், “உண்மையான விவசாயிகள் யாரும் இதுவரை எந்தப் போராட்டத்திலும் ஈடுபடவில்லை. எனவே டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் விவசாயிகள் அல்ல. அவர்கள் காசு கொடுத்து கூட்டி வரப்பட்ட கூட்டம்.” என்று சாடியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்