Aran Sei

‘சட்டப்படி சலுகை கிடைக்கும் என்று நம்புகிறேன்’ – சசிகலாவின் வழக்கறிஞர்

பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவின் விடுதலையில் சிறப்புச் சலுகை வழங்கப்பட மாட்டாது என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு, பிப்ரவரி 15-ம் தேதி, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார். கடந்த நான்கு ஆண்டுகளாகச் சிறையில் உள்ளார்.

சசிகலா விரைவில் விடுதலையா? – உண்மைத் தகவலைக் கூறிய உள்துறை செயலாளர் ரூபா

சமீபத்தில் அவருக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத் தொகை பெங்களூரு நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

சசிகலாவின் விடுதலை தொடர்பாக கர்நாடகவை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி ’ஆர்டிஐ’-யில் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு 2021-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று சிறைத்துறை பதில் கொடுத்திருந்தது.

தர்மயுத்தம் 2.0 – களை கட்டும் அதிமுக

அதன்படி, சசிகலா விடுதலையாக இன்னும் 68 நாள்கள் இருக்கிறது. இந்நிலையில், நன்னடத்தை அடிப்படையில் சிறைத்துறை, அவருக்கு 129 நாள்கள் சிறை தண்டனையில் இருந்து சலுகை வழங்க முடியும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சசிகலாவின் விடுதலைக் குறித்து, கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் செய்தியாளர்கள் கேள்வியை எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த பசவராஜ், “சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலா விடுதலையில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படாது.” என்று தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் 2,000 கோடி சொத்துகள் – வருமான வரித்துறை முடக்கம்

மேலும், சிறை சட்டங்களின்படியும், நீதிமன்றத்தின் விதிகளின் படியுமே அவர் விடுதலை செய்யப்படுவார் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து, சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியிடம் அரண்செய் பேசியபோது, “கர்நாடக சிறைத்துறையின் சட்டங்கள் படிதான் நாங்களும் நடந்துக்கொண்டிருக்கிறோம். வழக்கு தொடர்பாகச் சிறைத் துறை அதிகாரிகளைப் போய் சந்தித்துக்கொண்டிருக்கிறேனே தவிர எந்த அரசியல்வாதிகளையும் போய் பார்க்கவில்லை.” என்று கூறியுள்ளார்.

சசிகலாவின் விடுதலை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது: எடப்பாடி பழனிசாமி

மேலும், “சட்டப்படி எல்லாருக்கும் வழங்கப்படும் சலுகை, சசிகலாவிற்கும் கிடைக்கும் என்று சட்டம் தெரிந்த வழக்கறிஞராக நான் நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்