Aran Sei

பரவும் புதிய வகை கொரோனா – தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

bhjhvhjvghfgfgg

பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 120 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது உள்ள கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் இதுவரை 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. புதிய வகை தொற்று, கொரோனா தொற்றா என்பதை கண்டறிய அவர்களின் சளி மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் அதிவேகமாக பரவும் புதியவகை கொரோனா – நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்

நேற்று (டிசம்பர் 27), சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, “பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 50 அவசர சிகிச்சை வசதி கொண்ட படுக்கைகள் உட்பட 120 படுக்கைகள் கொண்ட தனி வார்டு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், அனைத்து அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தனி வார்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : பரவ தொடங்கிய புதிய வகை கொரோனா

புதிய வகை தொற்றின் வீரியம், தன்மை குறித்த முழுமையான தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்றும் “பொதுமக்கள் அச்சமோ, பதற்றமோ அடைய தேவையில்லை. தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.” என்றும் உறுதிப்பட கூறியுள்ளார்.

மேலும், “இந்தப் புதிய வகைத் தொற்றால் இளைஞர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். முகக்கவசம் அணியாததே அதற்கு முக்கிய காரணம். தமிழகத்தில் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கும் நிலைஏற்படாது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்தும் லாபவெறி அரசியலும்

கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஆராய்ச்சி முடிந்து விரைவில் வந்துவிடும் என்றும் முதல்வர் அறிவித்தபடி அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்