Aran Sei

’தீண்டாமைச் சுவரை அரசு விதிமுறையோடு கட்ட முடியுமா ? – நாகை திருவள்ளுவன்

கோவை மாவட்டம் மேட்டுப்பளையம் நடுவூர் பகுதியில், சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் நாள், ஆதிக்கச் சாதியினரால் கட்டப்பட்ட சுவர் இடிந்து விழுந்து அருந்ததியர்கள் 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் நடந்து ஓராண்டு ஆகிய நிலையில், சுவர் இடிந்து விழுந்த அதே இடத்தில் மீண்டும் ஒரு புதிய சுவர் எழுந்து நிற்கிறது. தங்கள் உறவுகளையும் விடுகளையும் இழந்து, நீதி கேட்டுப் போராடும் அருந்ததியர் மக்கள் மீது காவல்துறை வழக்குத் தொடுத்துள்ளது.

தீண்டாமைச் சுவர் : ’கேட்டது 17 உயிர்களுக்கு நீதி; கிடைத்தது பொய் வழக்குகள்’

இந்நிலையில், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி வரும் தமிழ்ப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த நாகை திருவள்ளுவனிடம் அரண்செய்  நேர்காணல் செய்துள்ளது.

சம்பவம் நடந்து ஓராண்டு ஆகிறது. அரசு வழங்குவதாகக் கூறிய இழப்பீடுகளும், வீடுகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா?

இறந்த 17 பேரில், இதுவரை 11 குடும்பங்களுக்குதான் இழப்பீட்டுத் தொகை வழங்கியிருக்கிறார்கள், அதுவும் முழுதாக வழங்கப்பெறவில்லை. ஆவணம் சரியாக இல்லை என்று கூறி மீதி பேருக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட இழப்பீட்டுத்தொகை வழங்காமல் மாவட்ட நிர்வாகத்தினர் மக்களை அலைக்கழித்துவருகிறார்கள்.

கடந்த திங்களன்று, சுவர் இடிந்ததால் வீடிழந்த மூதாட்டி ஒருவர் தற்போது வரை ரோட்டில்தான் படுத்துறங்குகிறார். தனக்கு உதவி செய்யும்படி மாவட்ட நிர்வாகத்திடம் போய் நிற்கிறார். ஆதாரம் கொண்டுவாவென நிர்வாகம் சொல்கிறது. இறந்த மகனுக்கும் பேத்திகளுக்குமான ஆதாரத்தை எங்குபோய் தேடுவது. அவர் எப்படி கொண்டு வருவார் ? இதைக்கூட புரிந்தக்கொள்ளாத அரசு நிர்வாகத்தின் இந்தச் செயல் மனசாட்சியற்ற செயல் என்று தான் சொல்லவேண்டும் .

உள்ளாட்சிகளில் தொடரும் சாதியப் பாகுபாடு – புறக்கணிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள்

மேலும், அங்கிருக்கும் 300-க்கும் மேற்பட்ட வீடுகளைக் காலி செய்து, புறநகர் பகுதியில் வீடு கட்டித் தருகிறோம் என்று அருந்ததிய மக்களிடம் அதிகாரிகள் பேசி வருகிறனர். அவர்கள் எதற்காக இடம்பெயர வேண்டும் அவர்களிடம் பட்டா இருக்கிறது. நகரப் பகுதியில் இருந்தால் மட்டுமே தங்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்காக வேலைக்குச் செல்ல முடியும். அதனால் அதே இடத்திலேயே, வீடுகளைக் கட்டி தரவேண்டும் என்று அரசிடம் கோருகிறோம்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஒருவருடமாகியும் வேலை இன்னும் வழங்கப்படவில்லை. இதிலிருந்து தெரிவது ஒன்றுதான், இந்தப் பிரச்னை பெரிதாகிவிடக்கூடாதென்றும், இறந்த 17 பேரை அடக்கம் செய்ய வேண்டும் என்கிற நெருக்கடியிலும் அரசு இந்த வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறதே ஒழிய, மக்கள் மீது அக்கறை இருப்பாதாய் தெரியவில்லை.

சாதி பெயரைச் சொல்லித் திட்டுகிறார்கள் – ஊராட்சி மன்ற பெண் தலைவர்

சம்பவம் நடந்த அன்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பல வழக்குகள் பதியப்பட்டன ? அவ்வழக்குகளின் நிலை என்ன ?

 

எங்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் எல்லாமே பொய் வழக்குகள் தான். சம்பவம் நடந்த அன்று காலை, எங்கள் கோரிக்கைகளை முன் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டோம். உடனடியாகக் குற்றவாளிகளைக் கைது செய்ய போராடினோம். இதைத்தொடர்ந்து, காவல்துறையினர் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் எங்களை மருத்துவமனைக்கு வர சொன்னார்கள். அதனால் தான் நாங்கள் பிணவறைக்கு போனோம்.

” வழக்கை வாபஸ் பெற மாட்டோம் ” – சாதி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம்

மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர், முதலமைச்சர் வருகிறார் உடனே சடலங்களை வாங்கிக்கொண்டு கலைந்து போங்கள் என்று வற்புறுத்தினர். நாங்கள் முடியாதென்று எதிர்த்ததானால் எங்கள்மீது தடியடி நடத்தி கைது செய்தார்கள். அப்பாவி மக்களுக்கு நீதி கேட்டுக் கையேந்தி நின்றோம். காவல்துறை அதிகாரத் திமிரோடு அக்கிரமமாக நடந்துக்கொண்டது.

 மறியல் செய்து, பொதுச் செத்துக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தியதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே, அது குறித்து?

முதல் தகவல் அறிக்கையில், நாங்கள் மறியல் செய்து அரசின் பொதுச் சொத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகச் சொன்னார்கள். என்ன பொதுச்சொத்து சேதப்படுத்தப்பட்டதென்று நீதிபதியே கேட்டார். அதற்கு அவர்கள், இரு சக்கர வாகனத்தின் கண்ணாடியை உடைத்ததாகச் சொன்னார்கள். 2000 பேர் சேர்ந்து இருசக்கர வாகனத்தின் கண்ணாடியையா உடைக்கப் போகிறோம்.

பிக்பாஸில் மட்டுமா சாதி? துப்புச்சுக்கு துப்புச்சுக்கு பார்வை

என்னைக் கைது செய்த பிறகு, கொங்கு மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட அருந்ததிய மக்களையும் எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களையும், பொய் வழக்குப் போட்டு கைது செய்தனர். இரண்டு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது

என் மீது ஏழு வழக்குகள் பதிந்தார்கள். ஒரு வழக்கில் பிணையில் வெளிவரும்போது வேறொரு வழக்கில் கைது கைது செய்யப்படுவேன். ஓராண்டாகியும் என்னால் அந்த பகுதிக்கு போக முடியவில்லை.

அண்மையில் மீண்டும் அதே இடத்தில் புதிய சுவரைக் கட்டியிருக்கிறார்களே?

அருந்ததிய மக்களைப் பார்க்கக்கூடாது என்ற அடிப்படையில் கட்டப்பட்ட சுவர் என்பதால்தான் அதைத் தீண்டாமை சுவர் என்கிறோம். அதைச் சரியாகக் கட்டாததால்தான் பலர் பலியானார்கள். ஆனால் இப்போது கட்டப்பட்ட சுவர் அரசு விதிமுறைப்படி கட்டப்பட்டிருக்கிறது என்று அரசு சொல்கிறது. தீண்டாமைச் சுவரை அரசு விதிமுறையோடு கட்ட முடியுமா என்ன ?

நன்றி : பேஸ்புக்

துரத்தும் சாதி ஆதிக்கம் – உயிர் பயத்தில் ஓடும் ஒரு குடும்பம்

நேற்று (டிசம்பர் 2) நடுவூரில் நடந்த ஓராண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு அரசின் கெடுபிடிகள் இருந்ததா?

மறைந்த இடத்தில் அஞ்சலி செலுத்துவது தமிழ் மரபு ஆனால், அதற்கும் தடை விதிக்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் இறக்கப்பட்டனர். ஒரு நினைவேந்தல் சுவரொட்டியைக்கூட ஒட்ட முடியவில்லை. ஒட்டிய சிலரை ரிமாண்ட் செய்திருக்கிறார்கள். கோரிக்கையையும் கேட்கமாட்டார்கள். ஒப்பாரி வைக்கவும் விடமாட்டார்கள்.

ஆரோக்கியத்தை கொடுக்கும் சாதி மறுப்பு திருமணம் – மரபணு ஆய்வு முடிவு

மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு பகுதியில் சாதிய கொடுமைகள் இப்போது எந்த அளவில் உள்ளது?  

கொங்கு பகுதியில் சாதியக் கொடுமைகள் மிக அதிகமாக நடக்கிறது. ஆனால் வெளியில் தெரியாமல் மறைக்கப்படுகிறது. அண்மையில், திருப்பூர் மாவட்டத்தில், ஆதிக்கசாதியினர் குடியிருக்கும் பகுதியில், தலித் ஒருவர் இடம் வாங்கி வீடு கட்டிவிட்டார் என்பதற்காக, அவரை அடித்து ஊரை விட்டு துரத்தியிருக்கிறார்கள்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டத்தில் தலித் பெண்ணை, ஆதிக்க சாதியினர் கேளி செய்ததை எதிர்த்து கேட்ட பெண்ணின் பெற்றோரை, ஆதிக்க சாதியினர் வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். முன்னமே கேளி செய்தது குறித்து, காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்போதே காவல் துறையினர் வந்திருந்தால், அவர்களை காப்பாற்றியிருக்கலாம்.

‘பிடுங்கப்பட்ட தீவுகளை மீனவப் பழங்குடிகளிடம் திருப்பிக் கொடுங்கள்’ – ஜோ டி குரூஸ்

அவினாசியில், தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைச் சத்துணவு செய்பவராக நியமித்தால், எங்கள் பிள்ளைகளை சாப்பிட அனுப்ப மாட்டோம் என்று ஆதிக்க சாதியினர் சொன்னதும் இதே மேற்கு மாவட்டங்கள்தான்.

கொங்கு பகுதியில் அருந்ததியின மக்களின் என்ணிக்கை குறைவாக இருப்பதும், இந்தத் தொடர் சாதிய கொடுமைகளுக்கு பெரிய அளவில் எதிர்வினையாற்ற முடியாமல் போனதற்கு ஒரு காரணமா?

எண்ணிக்கை குறைவு என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. கவுண்டர் சமுதாயத்திற்கு இணையாகவே எண்ணிக்கையில் உள்ளனர். சில இடங்களில் அவர்களை விட அதிகமாக அருந்ததியின மக்கள் இருக்கிறார்கள். ஆனால், அரசியல் விழிப்புணர்வும் ஒற்றுமையும் இல்லாமல் இருக்கிறார்கள்.

`தலித் மாணவர்களின் கல்லூரிக் கனவைக் குழிதோண்டி புதைத்தது மோடி அரசு’ – மே 17 இயக்கம்

எங்கள் மக்களுக்கு நிலம் மற்றும் பொருளாதார வசதி இல்லாததால் எங்களின் வாழ்வாதாரத்தைத் தீர்மாணிக்கக்கூடிய இடத்தில் எம்நிலைமை இல்லை. தினமும் ஆதிக்க சாதியினர் இடத்திற்குதான் வேலைக்குப் போகவேண்டி இருக்கிறது.

ஒரு சில கிராமத்தில் வேண்டுமென்றால் 40 அருந்ததியினர் வீடுகள்  இருக்கலாம். ஆனால் அடுத்த கிராமத்திற்கு போனால், 2000 வீடுகள் இருக்கும். இந்த 2000 வீடுகளில் இருக்கும் அருந்ததியின மக்கள் அரசியல் விழிப்புணர்வு இல்லாததால் தான், அந்த 40 வீட்டுக்காரர்கள் தாக்கப்படுகிறார்கள்.

அப்படி அரசியல் விழிப்புணர்வு இருந்திருந்தால், அந்த 40 வீட்டிற்காக போராட வந்திருப்பார்கள். அமைப்பாக அவர்கள் திரட்டப்படவில்லை. அது தான் முக்கிய பிரச்சனை.

வேல் யாத்திரை முருகனும் கொல்லப்பட்ட முருகேசன்களும்

மேலும், இரண்டு திராவிடக் கட்சிகளும் கழுகப் பார்வை பார்த்துக்கொண்டிருப்பது மேற்கு மாவட்டங்கள் மீது தான். அருந்ததியினர் மக்களின் வாக்கு வங்கியைத் தங்கள் பக்கம் இழுக்க, ஸ்டாலின் தன் யுத்தியை பயன்படுத்துகிறார். அதிமுக அருந்ததியினர் வாக்குகளை தக்கவைத்துக்கொள்ள தங்கள் யுத்தியை பயன்படுத்துகிறது.

ஏனென்றால், 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில், வெற்றியை தீர்மாணிக்கும் இடத்தில் அருந்ததிய மக்கள் இருக்கிறார்கள். குறைந்த பட்சம் ஒரு தொகுதிக்கு ஐம்பது ஆயிரம் மக்கள் இருப்பார்கள். தேர்தல் புள்ளி விவரங்களை எடுத்து பார்த்தாலே தெரியும்

தெற்குத்திட்டை வன்கொடுமை: சமூக விழிப்புணர்வு மையம் விரிவான அறிக்கை

மேலும், ஜனார்தனன் கமிட்டிக்கொடுத்த புள்ளி விவரங்களில் இருந்து இந்தக் கேள்வி வருகிறதா என்று தெரியவில்லை. ஆனால், அந்தப் புள்ளி விவரங்களே தவறு என்று எங்களால் நிரூபிக்க முடியும்.

நேர்காணல் : அரவிந்ராஜ் ரமேஷ்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்