Aran Sei

“முருகப்பா குழுமத்தில் பெண்களுக்கு இடமில்லை” – வள்ளி அருணாசலம் குற்றச்சாட்டு

credits : the hindu

முருகப்பா குழுமத்தின் நிறுவனர் திவான் பகதூர் ஏ எம் முருகப்பா செட்டியாரின் பேத்தியான வள்ளி அருணாசலம் முருகப்பா குழுமத்தில் தொடர்ந்து பெண்கள் ஓரங்கட்டப்பட்டு, ஆண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகக் குற்றஞ்சாட்டிய பிறகும் பெண்களுக்கு நிர்வாகக் குழுவில் இடம் அளிக்கப்படவில்லை என தி பிசினஸ் லைன் செய்தி வெளியிட்டுள்ளது.

1900 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட முருகப்பா குழுமம் (ரூ38,000 கோடி மதிப்புள்ள) இந்தியாவின் முன்னணி வணிக நிறுவனங்களில் ஒன்றாகும். சென்னையைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் இந்தக் குழுமம் 28 துறைகளில் வியாபாரம் செய்கிறது.

ஐடி சேவை நிறுவனங்கள் – சந்தை மதிப்பில் டிசிஎஸ் உலகில் முதலிடம்

இந்தக் குழுமத்தின் கீழ் கார்போராண்டம் யுனிவர்சல் லிமிடெட், சோழமண்டலம் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் லிமிடெட், சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட், சோழமண்டலம் எம்.எஸ்.ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட், கோரமண்டல் இன்ஜினீயரிங் கம்பெனி லிமிடெட் எனப் பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

முருகப்பா குழுமத்தின் கீழ் இயங்கும் அம்பாடி இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிட்டடின் (ஏஐஎல்) தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் செயல்பட்டு வந்த எம்.வி.முருகப்பன் 2017-ம் ஆண்டு மறைந்தார். அவரது மனைவி எம் வி வள்ளி முருகப்பன், மகள்கள் வள்ளி அருணாசலம் மற்றும் வெள்ளச்சி முருகப்பன் ஆகியோர் அந்த நிறுவனத்தின் 8.15 சதவீத பங்கைக் கொண்டுள்ளனர்.

அவருடைய தந்தையின் மறைவுக்குப் பிறகு நிறுவனத்தில் 8.15 சதவீதப் பங்கை கொண்டிருந்தாலும் நிர்வாகக் குழுவில் பெண்களுக்கு இடமளிக்கவில்லை. இதையடுத்து, வள்ளி அருணாசலம் முருகப்பா குழுமத்தில் பெண்கள் இணைக்கப்படாமல் ஓரங்கட்டப்படுகிறார்கள் எனக் குற்றஞ்சாட்டியதாக நியூஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது.

”உலகத்தில், பெண்கள் பல துறைகளில் தடைகளை உடைத்து சாதனை புரியும் இந்த நாளிலும், தென்னிந்திய வணிகத்தின் டைட்டன்ஸ் என்று அழைக்கப்படுபடும் முருகப்பா நிறுவனம் தங்கள் சொந்தக் குடும்பத்தின் பெண்களைப் புறக்கணிக்கிறார்கள்” என்று கூறியதாக நியூஸ் 18 இணையதளத்தில் செய்தி பதிவிடப்பட்டுள்ளது.

பங்குச் சந்தையில் ஐபிஓ பரபரப்பு : ஷியாம் சுந்தர்

 

மேலும் ”நிர்வாகக் குழுவில் இருக்கும் ஆண்களை விட நான் மிகவும் தகுதியுடையவர்“ எனக் கூறியுள்ளதாக நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து சமீபத்தில் முருகப்பா குழுமத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது செய்யப்பட்ட மறுசீரமைப்பிலும் தனது குடும்பப் பெண்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பிசினஸ் லைன் இணயதளத்திடம் வள்ளி அருணாசலம் “முருகப்பா குழுமம் குடும்ப ஒற்றுமையை உறுதிப்படுத்தவும், குடும்ப உறுப்பினர்களின் நலன்களுக்கு இடமளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், நாங்கள் குடும்பத்தின் அங்கமாகவும் பங்குதாரராக இருந்தபோதிலும் கூட குழுமத்தில் நடத்தப்பட்ட மறுசீரமைப்பு குறித்து எங்களில் எவருக்கும் அறிவிக்கப்படவில்லை. இந்தக் குழுமத்தில் எங்களுடைய பங்கை ஆற்ற அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

credits : the economic times
credits : the economic times

”எனது தந்தை குடும்ப வியாபாரத்திலும் வளர்ச்சியிலும் மிகப்பெரிய பங்காற்றியும் கூட எங்களை (மகள்கள்) குடும்ப வியாபாரத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை” என்று கூறியுள்ளார்.

பங்குச் சந்தை இழப்புகள்: உண்மையா? கற்பனையா?

”முருகப்பா குடும்பத்தின் அடுத்த தலைமுறை உறுப்பினர்களில் நாங்களும் ஒரு பகுதியாக இருக்கிறோம். நானும் என் சகோதரியும் சிறந்த கல்வித் தகுதியிடனும் வலுவான தொழில்முறை தகுதியையும் பெற்றுள்ள நபர்கள். ஆனாலும் நாங்கள் குடும்ப வியாபாரத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறோம், புறக்கணிக்கப்படுகிறோம், “என்று வள்ளி அருணாசலம் கூறியுள்ளார்.

எரிவாயுவிற்கான விலையை நிர்ணயிக்க அரசின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை – மத்திய அரசு

”என்னுடைய நினைவுக்கு எட்டிய வரை ஒரு பெண் கூட குடும்ப வியாபாரத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை” என வள்ளி தெரிவித்துள்ளார்.

”இந்த மறு சீரமைப்பில் முருகப்பா குழுமம் செய்த தவறுகளை (பெண்களை வியாபாரத்தில் சேர்க்கத் தவறியது) சரி செய்ய அவர்களுக்கு நிச்சயமாக ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர்கள் திட்டமிட்டு அதைச் செய்ய மறுத்துள்ளனர்” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்வாறு பிசினஸ் லைனிடம் வள்ளி அருணாசலம் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்