இலங்கை உள்நாட்டுப் போரின்போது தமிழின மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை மாணவர்களின் எதிர்ப்பையும் மீறி சிங்கள அரசு இடித்துத் தரை மட்டமாக்கியது. தமிழகத்தில் திருமாவளவன், வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தகர்க்கப்பட்ட தூபியை மேல் நிர்மாணிப்பதில் இந்தியாவின் தலையீடு இருப்பதாக கூறப்படுகிறது தமிழ்வின் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று காலையில் அடிக்கல் நாட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர் சற்குணராஜா சென்றபோது இடையில் குறுக்கிட்ட காவல்துறை அதிகாரியிடம் “இவ்விசயம் தொடர்பான பிரச்சனை இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. ஆகவே, அரசாங்கம் இதை சுமூகமாக முடிக்கச் சொல்லி விட்டது” என்று தெரிவித்ததாகவும்,ஆகவே இன்னுமும் இலங்கை பிரச்சனையில் தமிழகத்திற்கு ஒரு பங்கு இருப்பதாக இருக்கிறது இதன் மூலம் புலனாகிறது என்று தமிழ்வின் கூறியுள்ளது.
”தமிழகத்தில் இப்போது தேர்தல் காலம். ஆகவே, ‘இலங்கை பிரச்சினை’ பற்றிய பேச்சுகள் வழமையை விடவும் உரக்கவும், பரவலாகவும் நடைபெற்றாலும் சரி, இங்குள்ள சில தமிழ், சிங்கள அரசியல் தரப்புகள் தமிழக அரசியல்வாதிகளை கிண்டலடித்து, திட்டி தீர்த்தாலும் சரி, இதுதான் உண்மை நிலவரம் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன” என்று இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ்வின் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தகர்க்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் அமைக்கும் பொருட்டு இன்றைய தினம் பல்கலைக்கழகத் துணைவேந்தரால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
முத்தையா முரளிதரனும் மறைக்கப்படும் வரலாற்று உண்மைகளும் – சபா நாவலன்
துணைவேந்தரின் இந்தத் திடீர் மன மாற்றத்திற்கும், முடிவிற்கும் இந்தியாவிலிருந்து கொடுக்கப்பட்ட அரசியல் சார்ந்த அழுத்தங்களே காரணமென பல்கலைக்கழக வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதாக தமிழ்வின் இணையம் தெரிவித்துள்ளது.
இவ்வேளை, இத்தூபி சட்டவிரோதமான தூபி எனவும், இதுகுறித்து கருத்து வெளியிட எதுவுமில்லை எனவும் கல்வியமைச்சர் ஜி.எல். பீரிஸ் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.