Aran Sei

சாஸ்திரிபவன் முற்றுகை – திருமுருகன் காந்தி கைது

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்த மசோதா, வேளாண் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தக சட்டம், பண்ணை ஒப்பந்த சட்டம் ஆகிய வேளாண் தொடர்பான மூன்று மசோதாக்கள் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்திரபிரதேசம், தெலுங்கானா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்கங்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதைத் தொடர்ந்து சென்னையில் இன்று மே 17 மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் நலனை பாதிக்கும் வேளாண் மசோதாக்களைத் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி திருமுருகன் காந்தி தலைமையில், மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு சாஸ்திரி பவனை முற்றுகையிட முயன்றனர்.

May 17 protestமுன்னறிவிப்பு செய்யப்பட்ட போராட்டம் என்பதால் சாஸ்திரி பவன் அருகே காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தார்கள்.

விவசாய சட்ட மசோதாவின் நகலை எரித்து வேளாண் மசோதாக்கள் குறித்த எதிர்ப்பை போரட்டக்காரர்கள் பதிவுசெய்தனர். அப்போது திருமுகன் காந்தி உட்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவலர்கள் கைது செய்தனர்.

Burning the billமுற்றுகை போராட்டத்துக்கு பிறகு திருமுருகன் காந்தி ட்விட்டரில், “வேளாண்மை மாநில உரிமை. இதில் மத்திய அரசுக்கு தலையிட எந்த உரிமையும் இல்லை.” எனப் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப் பட்டுள்ள நிலையில், இன்று மாலை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி குலாம் நபி ஆசாத், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து பேசினார்.

Opposition leadersமாநிலங்களவையில் விதிகளை மீறி நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் தொடர்பான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என அவர் முறையிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்