Aran Sei

’சுடுகாடு செல்லும் பாதை தலித் மக்கள் அனைவருக்கும் உள்ளதா?‘ – தமிழக அரசிடம் உயர்நீதி மன்ற மதுரை கிளை கேள்வி

துரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மருதூர், சென்னகரம்பட்டி, நடுப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள தலித் குடியிருப்புகளில், இறந்துபோனவர்கள் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல உரிய பாதை இல்லை. அதனால், வயல்களின் வழியாக, இறந்தவர்களை கொண்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து தினகரன் நாளிதழின் மதுரை பதிப்பில் டிசம்பர் 20 ஆம் தேதியும், 21 ஆம் தேதியும் செய்தி வெளியிடப்பட்டது. இச்செய்தியை அடிப்படையாகக் கொண்டு, மதுரை உயர்நீதி மன்றக் கிளை, இவ்விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளது.

தீண்டாமைச் சுவர் : ’கேட்டது 17 உயிர்களுக்கு நீதி; கிடைத்தது பொய் வழக்குகள்’

இதையெடுத்து, டிசம்பர் 21 ஆம் தேதி, மதுரை உயர்நீதி மன்றக் கிளையின் நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் பி.புகழேந்தி அடங்கிய அமர்வு, தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வருவாய்த் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகிய துறைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நன்றி : தினமலர்

அதில், “பல நூற்றாண்டுகளாக தலித் மக்களை இழிவு படுத்தியும் பாகுபாடு காட்டியும் நடத்தியதற்காக அவமானத்தில் தலைகுனிகின்றோம். தலித் மற்றும் பழங்குடியின மக்கள் முறையாக நடத்தப்படவில்லை என்பதாலும், வன்கொடுமைக் குற்றங்களால் பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், மாண்புடன் நடத்தவும், பாதுகாக்கவும் மத்திய அரசு வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம், 1989-ஐ கொண்டுவந்தது.” என்று மேற்கோள்காட்டியுள்ளது.

’தீண்டாமைச் சுவரை அரசு விதிமுறையோடு கட்ட முடியுமா ? – நாகை திருவள்ளுவன்

மேலும் “இச்சட்டம் சில நேரங்களில், சில நபர்களால், குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது என்றும் அதேநேரம், தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கின்றன. போதிய அடிப்படை வசதிகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை” என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது நடந்துள்ள சம்பவத்தை பற்றி குறிப்பிடுகையில், “மேலூர் வட்டம், மருதூர் தலித் குடியிருப்பில் இறந்துபோன தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரின் உடலை, உரிய சுடுகாட்டுப்பாதை இல்லாத காரணத்தால், பயிர் செய்துள்ள விவசாய நிலங்கள் வழியாக எடுத்துச் செல்லும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.” என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தெற்குத்திட்டை தீண்டாமை: `தலைவருக்கு அவமானம்’ – செயலாளர் பணியிடை நீக்கம்

உயிருள்ளவர்களுக்கு மட்டுமல்ல, இறந்த உடல்களுக்கும் தேவையில்லாத சங்கடங்களை அளிக்கின்றது என்றும் தலித் மக்கள் சுடுகாடு செல்ல சரியான பாதை இருக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

“ஒரு பக்கம் போராட்டம் செய்கிறோம்; மறுபக்கம் எங்கள் வீடுகளை இடிக்கிறார்கள்” – கூவம்கரை மக்கள்

இதைத்தொடர்ந்து, இந்த பிரச்சினையை வழக்காக எடுத்துக்கொள்வது பொருத்தமானது என்று கருதுவதாக தெரிவித்துள்ள நீதிபதிகள், “தமிழ்நாடு மாநிலத்தில் எத்தனை தலித் குடியிருப்புகள் உள்ளன? அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் வசதிகள், தெரு விளக்குகள், கழிப்பறை வசதிகள் மற்றும் சுடுகாட்டுப் பாதைகள் மற்றும் சாலைகள் கிடைத்துள்ளதா? எத்தனை குடியிருப்புகளுக்கு சுடுகாட்டுப் பாதைகள் இல்லை? சுடுகாட்டுப் பாதை அமைப்பதற்கான நிலங்களை கையகப்படுத்தப்பட்டுள்ளதா? அதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும் என்ன?” என்று விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

துரத்தும் சாதி ஆதிக்கம் – உயிர் பயத்தில் ஓடும் ஒரு குடும்பம்

மேலும், அனைத்து தலித் குடியிருப்புகளுக்கும் குடிநீர், தெரு விளக்குகள், கழிப்பறை வசதிகள் மற்றும் சுடுக்காட்டுப் பாதை ஆகியவை எப்போது வழங்கப்படும்? என்பது குறித்து தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வருவாய் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகியவை நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இப்பிரச்சனை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலூர் தாலுகா செயலாளர் கண்ணன் தீக்கதிர் நாளிதழிடம் கூறுகையில், “தலித் மக்கள் மயானத்திற்கு செல்வதற்கு ஒரு குறிப்பிட்ட தூரம் தான் பாதை உள்ளது. அதன் பின்னர் வயலில் இறங்கித்தான் செல்ல வேண்டும். இந்த அவலத்திற்கு தீர்வு காணவேண்டுமென பலமுறை மனு அளித்துவிட்டோம்.” என்று தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சிகளில் தொடரும் சாதியப் பாகுபாடு – புறக்கணிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள்

“மூன்றாண்டுகளுக்கு முன்பு கூட மேலவளவு தலித் மக்களுக்கு சுடுகாட்டுப்பாதை கேட்டு மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. உடனடியாக ஆவன செய்வதாக அதிகாரிகள் கூறினார்கள். மூன்றாண்டுகளாகியும் இது தொடர்பானகோப்புகள் நகர்ந்து நகர்ந்து எங்கே சென்றது எனத் தெரியவில்லை.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் இந்த நகர்வு குறித்து இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “நீதிமன்றத்தின் இம்முயற்சியை வரவேற்கின்றோம். அரசு தாமதப்படுத்தாமல், இவ்வழக்கில் உரிய பதில்களை அளித்து, நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளபடி தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கான அனைத்து அடிப்படை உரிமைகளையும் நிறைவேற்ற வேண்டும்.” என்று கோரிக்கை வைத்துள்ளது.

” வழக்கை வாபஸ் பெற மாட்டோம் ” – சாதி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே நாராயணபுரத்தில் பாலாற்றுக் கரையோரம் உள்ள சுடுகாட்டிற்கு, குப்பன் என்ற தலித் சமூகத்தை சேர்ந்தவரின் உடலை கொண்டு செல்ல பாதை மறுக்கப்பட்டது. அதனால், 20 அடி உயர பாலத்தில் இருந்து, இறந்தவரின் உடலை கயிறு கட்டி கீழே இறக்கி, உடலை அடக்கம் செய்தனர்.

 

நன்றி : தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

 

பாலாற்றுக் குறுக்கே அரசலந்தபுரம் – நாராயணபுரம் இடையே பாலம் கட்டிய பிறகு, மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆற்றுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்ததாகவும் அவர்கள் தங்களுடைய விவசாய நிலங்கள் வழியாக  இறந்தவரின் உடலை தலித்துகள் சுடுக்காட்டுக்கு எடுத்துச் செல்வதற்கு அனுமதி மறுத்து வருகின்றனர் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

தொடரும் சாதிய பாகுபாடு : மலம் அள்ள நிர்ப்பந்திக்கப்பட்ட தலித் சிறார்கள்

மேலும், கடந்த 4 ஆண்டுகளாக பாலத்திலிருந்து தான், தலித் மக்களின் உடலை கயிறு கட்டி இறக்கி அடக்கம் செய்துவருவதாகவும் அந்த செய்தி கூறுகின்றது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்