Aran Sei

நடிகை குஷ்பு கைது – “திருமாவை எப்படி அண்ணன் என்று அழைப்பது”

திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்த சென்ற நடிகையும், பாஜக உறுப்பினருமான குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன், இணையவழி கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மனுநீதியில் பெண்கள் குறித்து இடம்பெற்றுள்ள கருத்துகளை குறிப்பிட்டு பேசினார்.

திருமாவளவனின் இந்தக் கருத்து பெண்களை இழிவுபடுத்துவதாக இருப்பதாக பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில், தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்ட திருமாவளவன், மனுநீதியில் உள்ளதை அம்பேத்கரும், பெரியாரும் சுட்டிக்காட்டிதையே தானும் சுட்டிக்காட்டினேன் என்றும், பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக சிலர் வேண்டுமேன்றே சிலர் திரித்த கூறுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

திருமவாளனுக்கு எதிராக பாஜக சட்டப் பிரிவு மாநிலச் செயலளார் அஸ்வத்தாமன் கொடுத்த புகாரின் அடிப்பயில் திருமாவளன் மீது 6 பிரிவின் கீழ் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு வழக்கு பதிவு செய்தது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்புகளும் காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து, திருமாவளவனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதற்கிடையில், மனுநீதியை தடைசெய்யக் கோரி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் திருமாவளவன் கலந்துகொண்டார்.

இந்நிலையில், திருமாவளவனுக்கு எதிராக பாஜவினர் இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக சிதம்பரத்தில் திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்த சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்ற நடிகை குஷ்பு கிழக்கு கடற்கரை சாலையில், முட்டுக்காடு அருகே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அவருடன் சென்ற பாஜகவினரும் 20 பேரும் தடுத்து நிறுத்தப்பட்ட தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டதை உறுதி செய்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள நடிககை குஷ்பு, 3000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட மனுநீதி சமஸ்கிருதத்திலிருந்து, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு  பல சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசனமே நடைமுறையில் உள்ளதாக கூறியுள்ள குஷ்பு, இப்போது மனுநீதி பற்றி ஏன் பேச வேண்டும் என்று கேள்வியெழுப்பி உள்ளார். திருமாவளவன் மன்னிப்பு கோரும்வரை போராடுவோம் என்றும் குஷ்பு கூறியுள்ளார்.

இதற்கிடையில் டிவிட்டரில் பதிவிட்டுள்ள திருமாவளவன், “அவர்கள் தங்களை அம்பலப்படுத்திக் கொள்ளட்டும். நம் கவனம் மனுநூலை அம்பலப்படுத்தும் மகத்தான பணியில் மட்டுமே குவியட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே திருமாவளவனுக்கு சிலர் கருப்பு கொடி காட்டியுள்ளனர். இதுகுறித்து பதிவிட்டுள்ள திருமாவளவன் “…பெரியார் கொடி பிடித்து வரவேற்றனர். நான் களிப்புப் பொங்க கையசைத்தேன். பின்னர் சிறுத்தைகள் அவர்களுக்கு சிறப்புச் செய்தனர்” என்று கூறியுள்ளார்

தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள குஷ்பு உட்பட பாஜகவினர் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்