Aran Sei

குஷ்பு கைதுக்கு அரசை பாராட்ட வேண்டும் – செல்லூர் ராஜு

ட்ட ஒழுங்கை கலங்கப்படுத்த முயன்ற குஷ்புவை கைது செய்ததற்கு அரசை பாராட்ட வேண்டும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன், இணையவழி கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மனுநீதியில் பெண்கள் குறித்து இடம்பெற்றுள்ள கருத்துகளை குறிப்பிட்டு பேசினார்.

திருமாவளவனின் இந்தக் கருத்து பெண்களை இழிவுபடுத்துவதாக இருப்பதாக பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில், தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்ட திருமாவளவன், மனுநீதியில் உள்ளதை அம்பேத்கரும், பெரியாரும் சுட்டிக்காட்டிதையே தானும் சுட்டிக்காட்டினேன் என்றும், பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக சிலர் வேண்டுமேன்றே சிலர் திரித்து கூறுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

திருமவாளனுக்கு எதிராக பாஜக சட்டப் பிரிவு மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருமாவளன் மீது 6 பிரிவின் கீழ் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு வழக்கு பதிவு செய்தது.

மனுதர்மம் தொடர்பான திருமாவளவனின் பேச்சை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியினர் மாநிலமெங்கும் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த இருப்பதாக அறிவித்தனர்.

இதை தொடர்ந்து, சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. சமீபத்தில் பாஜக-வில் இணைந்த குஷ்பு அதில் பங்கேற்பதாக இருந்தார். மேலும் அவருடன் சசிகலா புஷ்பா, ராகவன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொள்ள இருந்தனர். இந்த போராட்டத்திற்கு தமிழக காவல்துறை தடை விதித்தது.

இந்த நிலையில், தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்பதற்காக, குஷ்பு காரில் புறப்பட்டு சென்றார்.  கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு அருகே  காவல்துறையினர்  அவரை கைது செய்தனர். அவருடன் சென்ற பாஜகவினர் 20 பேரும் தடுத்து நிறுத்தப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

குஷ்பு ட்விட்டரில் வெளியிட்ட படம்

இந்நிலையில், தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க மதுரைக்கு  வருகை தரும் முதல்வருக்கு வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மதுரை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது குஷ்பு கைது குறித்து கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளித்த போது, “சட்டம் ஒழுங்கை யார் கலங்கப்படுத்தினாலும் அரசு நடவடிக்கை எடுக்கும். குஷ்பூவை கூட காவல்துறை கைது செய்துள்ளது. இதுவே சட்டத்தை அரசு காப்பாற்றுகிறது என்பதற்கு உதாரணம். சட்டத்தை காப்பாற்றுவதற்கு அரசு தயங்காது. இதற்கு அரசை பாராட்ட வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்