ஆம்பளையா இருக்குறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் இரும்பு பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளையா?. நீங்கள் தவழ்ந்து சென்று கால் பிடித்த சசிகலா ஆம்பளையா? என எடப்பாடி பழனிச்சாமிக்கு இயக்குநர் நவீன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் எடப்பாடி தரப்பில் போட்டியிடும் கே.எஸ் தென்னரசுவுக்கு ஆதரவாக நேற்று எடப்பாடி பழனிச்சாமி வாகன பிரச்சாரம் மேற்கொண்டார்.
உழவன் மகன் என எடப்பாடி பழனிசாமி நடிப்பதை விவசாயிகள் நம்பமாட்டார்கள் – வைகோ
அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி வாக்காளர்களை திமுகவினர் அடைத்து வைப்பதாக குற்றம் சாட்டினார். அதன் பிறகு மீசை வச்ச ஆம்பளையா இருந்தா வாக்காளர்களை வெளியே விட்டு விட்டு தேர்தலை எதிர்கொள் என்று கூறினார். அதோடு அதிமுகவை நேரடியாக எதிர்க்க திமுகவுக்கு தைரியம் இல்லை.
அதிமுக ஆட்சி தான் பொற்கால ஆட்சியாக இருந்தது என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் இயக்குநர் நவீன் எடப்பாடி பழனிச்சாமி பேசிய வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து விமர்சித்துள்ளார்.
ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் இரும்புப்பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளயா? நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா?
இன்னும் எத்தனை காலம் இந்த stereotype வசனம் பேசுவீங்க? இது பெண்களை இழிவு படுத்தும் செயல்.
pic.twitter.com/FWbVYVWp1Q— DirectorNaveen (@NaveenFilmmaker) February 16, 2023
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆம்பளையா இருக்குறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் இரும்பு பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளையா?. நீங்கள் தவழ்ந்து சென்று கால் பிடித்த சசிகலா ஆம்பளையா? இன்னும் எத்தனை காலம் stereo type வசனம் பேசுவீங்க. மேலும் இது பெண்களை இழிவுபடுத்தும் செயல்” என்று பதிவிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.