Aran Sei

‘பக்தர்கள் கையில் கோவில்’ என்பது ஜக்கியின் கருத்தல்ல, பாஜக கருத்து – கொளத்தூர் மணி

மிழக கோவில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஜக்கி வாசுதேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, நேற்று (ஜனவரி 7) ஜக்கி தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், “தமிழக கோவில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி ஸ்தலங்களின் புனிதம் சேதப்படுத்தப்படுகிறது. ஆலயங்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது, அதிகாரிகளாலும் அரசியல் சக்திகளாலும் அல்ல.“ என்று தெரிவித்துள்ளார்.

கோயில் சொத்துகள் யாருக்கு? – இந்து அறநிலையத் துறையின் வரலாறு

மேலும் இந்த ட்விட்டர் பதிவில், பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரை இணைப்பில் (Tag) சேர்த்துள்ளார் செய்துள்ளார்.

இந்த ட்வீட்டுக்கு பதில் சொல்லும் வகையில், டோமேசன் என்ற ட்விட்டர் பயனாளர், “பக்தர்கள் போர்வையில் கபளீகரம் செய்ததால்தான் அதைக் காப்பாற்ற அரசால் அறநிலையத்துறை 60 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது என்ற வரலாறு தங்களுக்கு தெரியுமா? மீண்டும் பக்தர்கள் போர்வையில் ஆசிரமவாதிகளும் சனாதன காவலர்களும் முயற்சி.” என்று தெரிவித்துள்ளார்.

ஈஷா யோக மையம் நடத்தும் மகாசிவராத்திரி போன்ற பெரிய விழாக்களை, வெள்ளியங்கிரி போன்ற, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த மலைத்தொடர் பகுதிகளில் நடத்துவது கவலை அளிக்கும்படியாக உள்ளது என்று, சமீபத்தில் தேசிய பசுமைத் தீர்பாயம் தெரிவித்திருந்தது. மேலும், இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், கோவை மாநகராட்சி விரிவான அறிக்கை தாக்க செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் – உயர் நீதிமன்றம்

இதுகுறித்து, திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியிடம் அரண்செய் பேசியபோது, “கோவில்களை அறநிலையத்துறையிடமிருந்து பறிக்க வேண்டும் என்ற முயற்சியில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. பொன் மாணிக்கவேல் போன்ற அதிகாரிகளை கொண்டு வந்து, சிலைகள் திருடு போகிறது, அதானல் அறநிலையத் துறையை கலைக்க வேண்டும் என்றது.” என்று கூறினார்.

மேலும், “ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதலமைச்சராக இருந்தபோது, கோவில்களில் நடந்த ஊழல்களை சுட்டிக்காட்டி தான் இந்த அறநிலையதுறையை கொண்டு வந்தார். இப்போது கோவில்களில் சிலைகள் திருட்டுப் போவதாக சொல்கிறார்கள். கற்பகிரஹத்தில் இருக்கும் சிலை அர்ச்சகர்களுக்கு தெரியாமலா திருட்டு போகிறது. வெளியேயிருந்து வந்து காவல்துறை கண்டுபிடிக்கிறார்கள். தினமும் பார்க்கும் அவர்களுக்கு தெரியாதா? அப்படிப்பட்டவர்களின் கைகளில் மீண்டும் கோவில்கள் போனால் என்னாகும்?” என்று கொளத்தூர் மணி கேள்வி எழுப்பினார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் – ஜக்கி வாசுதேவை பாஜக எப்படி பயன்படுத்தியது?

தமிழகக் கோயில்கள் அரசின் ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்ட வரலாறு கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் இருந்தே தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டம் 22/1959 என அழைக்கப்படும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம், தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோயில்களை மட்டுமல்ல, சமணக் கோயில்கள் மற்றும் சமயம் சார்ந்த அற நிலையங்களை நிர்வகிப்பதற்கான சட்ட அதிகாரத்தைத் தருகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்