Aran Sei

திமுக, மதிமுக நிர்வாகிகள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை – பாஜக தலைவர் போட்டியிடும் தாராபுரம் தொகுதியில் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதியில் திமுக , மதிமுக நிர்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை, சோதனை நடத்தியுள்ளது.

தாராபுரத்தில் மதிமுகவின் மாவட்ட துணை செயலாளர் கவின் ராஜ் மற்றும் திமுக நகர செயலாளர் கே.எஸ்.தனசேகர் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

நான் குற்றவாளி அல்ல, வருமான வரித்துறையை கண்டு அஞ்ச மாட்டேன் – நடிகை டாப்ஸி

தாராபுரம் சட்டமன்ற(தனி) தொகுதியில் அதிமுக- பாஜக கூட்டணியின் சார்பாகப் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் .

இந்தத் தொகுதியில் பாஜகவை எதிர்த்துத் திமுக சார்பில் கயல்விழி களம் காண்கிறார் .

நடிகை டாப்சி வீட்டில் சோதனை: பாரிஸ் பங்களா சாவி கிடைத்ததா? – வருமான வரித்துறையை பகடி செய்த டாப்சி

இந்நிலையில் திமுக , மதிமுக கட்சியினரின் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, மேற்கு வங்க மாநில திரிணாமுள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு மத்திய அரசின் அமலாக்கத்துறையும் வருமானவரிதுறையும்  ஆஜராக சொல்லி நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா,  வருமானவரிதுறை மூலம் தங்களை மிரட்டுவதாக குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மத்திய அரசை விமர்சித்த நடிகை டாப்சியின் வீட்டிலும் வருமானவரிதுறை சோதணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்