Aran Sei

‘ஐ யாம் சாரி’ ‘ஐ யாம் டயர்ட்’ – மனதை உலுக்கும் கடைசி கடிதம்

நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மதுரை மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா எழுதிய கடிதம் –  தமிழில்

யாராவது இதைப் பார்த்தா, பிளீஸ் பிளீஸ் இதை என் அப்பா அம்மாகிட்ட கொடுத்துடுங்க. இதை நீங்க படிக்கும் போது நான் இங்க இருக்க மாட்டேன். என்னை மன்னிச்சிடுங்க, என்னை மன்னிச்சிடுங்க.

என் முடிவுக்கு மன்னிப்பு கேட்பது போதாதுன்னு எனக்குத் தெரியும். ஆனா என்னை மன்னிச்சிடுங்க. பிளீஸ் உங்களை குற்றம் சொல்லிக்காதீங்க, இது உங்க தப்பு இல்ல.

இந்த 18 வருஷம் என்னை நீங்க ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டீங்க. நீங்க என் மேல நிறைய அன்பு வைச்சிருந்தீங்க. நீங்க எனக்கு எல்லாவற்றையும் செய்தீங்க. நீங்க எப்பவுமே எனக்கு ஆதரவா இருந்தீங்க, என் பக்கம் நின்னீங்க. உங்களுக்கு என்னிடமிருந்து நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. எதிர்காலத்தில் நான் நிறைய பேருக்கு உதவி செய்வேன் என்று நம்பினீங்க.

அம்மா – நீங்க என்ன ரொம்ப ரொம்ப லவ் பண்ணினீங்க. மன்னிச்சிடுங்க அம்மா. என்னைய ரொம்ப பொக்கிஷம் மாதிரி பார்த்துகிட்டீங்க. நான் என்ன முடிவு எடுத்தாலும் ஆதரிச்சீங்க. நான் எவ்ளோ கோபம் பட்டாலும் நீங்க என்னைக்குமே என்ன திட்டுறது இல்ல. ஐ லவ் யூ அம்மா. என்னை விட நான் உங்களை அதிகமா நேசிக்கிறேன். ஐ ஆம் சாரி அம்மா, இது உங்க தப்பு இல்ல, உங்களை குறை சொல்லிக்காதீங்க, சோகமாக இருக்காதீங்க.

ஶ்ரீதர் எதிர்காலம் உன்னை நம்பிதான் இருக்கிறது. நீ சோகமாக இருந்தா அவனை யார் கவனிப்பாங்க.

அம்மா, என்னைப் பத்தி எல்லாத்தையும் மறந்திடு. பிளீஸ் மூவ் ஆன், பிளீஸ் மூவ் ஆன்.

நீங்க செய்யுற எல்லா சமையலும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா. உங்க ஐஸ்கிரீம் எனக்கு பிடிக்கும். பிளீஸ் அம்மா, சோகமா இருக்காதீங்க. நீங்க சோகமா இருந்தா நான் சந்தோஷமா இருக்க மாட்டேன்.

அப்பா – ஐ லவ் அப்பா, ஐ லவ் யூ, ஐ லவ் யூ, ஐ லவ் யூ அப்பா. வேறு எதை விடவும் உன்னைத்தான் லவ் பண்றேன். உங்களை நிறைய மதிக்கிறேன். நீங்க எனக்காக எல்லாத்தையும் செஞ்சீங்க. உங்க பெருமையைப் பற்றி கவலைப்பட்டதே இல்லை. எல்லா நிலைமையிலும் எனக்கு ஆதரவா நின்னீங்க. கருணைன்னா என்ன, எல்லாத்தையும் எப்படி லவ் பண்றது, நல்ல விஷயங்களை கத்துக்கறது எப்படின்னு நீங்க எனக்கு சொல்லித் தந்தீங்க. என் ஒட்டு மொத்த வாழ்க்கையிலேயும் நீங்க என்னை பாதுகாத்தீங்க. என் மொத்த வாழ்க்கையிலேயும் நீங்க எப்பவுமே என்னை பாதுகாத்திருக்கீங்க. நீங்கதான் என்னோட ஹீரோ. உங்ககிட்ட இருந்து நான் நிறைய விஷயங்களை கத்துக்கிட்டிருக்கேன். எங்கிட்டருந்து நிறைய எதிர்பார்த்தீங்க. அப்பா, நான் நல்லா படிச்சேன். கடைசி தயாரிப்பு தேர்வில் எனக்கு 590+ கிடைத்தது. ஆனா அப்பா எக்ஸாமை நினைச்சு எனக்கு பயமா இருக்கு.

ஐ லவ் யூ அப்பா, ஆனா என்ன மன்னிச்சிடுங்க. இது உங்க தப்பு இல்ல. என்னோட கடைசி ஆசை உங்களை குறை சொல்லிக்காதீங்க.

ஶ்ரீதர் எதிர்காலம் உங்களை நம்பி இருக்கு அப்பா. பிளீஸ் அப்பா, சோகமாக இருக்காதீங்க. துயரத்தில வாழாதீங்க. நகர்ந்து போங்க. என்னைப் பற்றி எல்லாத்தையும் மறந்திடுங்க.

நீங்க ஒரு ஹார்ட் பேஷன்ட். அதனால சோகமா இருக்காதீங்க. அது உங்க ஹெல்த்த பாதிக்கும். இரவு நீண்ட தூர பயணத்தை தவிர்த்திடுங்க. தனியா நீண்ட தூரம் பயணம் பண்ணாதீங்க. எப்படியும் யாராவது கூட்டிட்டே பயணம் போங்க. செல்ஃபோன் ரொம்ப பாக்காதீங்க அப்பா.

பிளீஸ் இன்னும் அழாதீங்க. உங்களால தாங்க முடியாது. சோகமா இருக்காதீங்க. எப்பவும் நீங்க செலக்ட் பண்ற டிரெஸ்தான் எனக்கு பொருந்தும். டயட்டை விடாதீங்க. டயட்டை நல்லா பின்பற்றுங்க. உங்க ஹெல்த் தான் ரொம்ப முக்கியம். ஶ்ரீதர் 9வது 10வது போகப் போறான். அவன நல்லா பாத்துக்கிறது உங்கள நம்பிதான இருக்கு. அதனால, சோகமா இருக்காதீங்க.

நீங்கதான் எனக்குக் கிடைச்சிருக்கக் கூடிய உலகத்திலேயே பெஸ்ட் அப்பா. திரும்பவும் நான் சொல்றேன் => உங்க ஹெல்த் வேற எல்லாத்தையும் விட முக்கியமானது. அதனால் ராத்திரி நிறைய நேரம் செல் பாக்காம தூங்குங்க.

அப்பா, மறக்காம செக்-ப் போங்க ரெகுலரா. எப்பவும் போல நீங்க சந்தோஷமா இருங்க. சூழ்நிலையை எப்பவும் சந்தோஷமா வச்சிருக்க உங்களால மட்டும்தான் முடியும். பை அப்பா. நிறைய விஷயங்களை உங்ககிட்ட சொல்லணும். ஆனா, எனக்கு நேரம் இல்ல.

ஶ்ரீதர் – ஐ லவ் யூ ஶ்ரீதர். நீ என்னை மிஸ் பண்ணுவேன்னு எனக்குத் தெரியும். நீ என் மேல அதிகமா அன்பு வைச்சிருக்கேன்னு எனக்குத் தெரியும். ஆனா, உண்மையிலேயே ஐ யாம் சாரி ஶ்ரீதர். மிகச் சிறந்த தம்பி நீ.

நான் ஒரு கோழை. உன் அன்புக்கும் மரியாதைக்கும் எனக்கு தகுதி இல்லை. அப்பா அம்மாவை நல்லா பாத்துக்கோ. எனக்காக அழாதே, எனக்காக சோகமாக இருக்காத. நீ மட்டும்தான் அப்பா அம்மாக்கு இருக்க. நீ சோகமா இருந்தேன்னா அவங்களும் சோகமா இருப்பாங்க. நீ பெரிய பையன் ஆகிட்ட. உயர் படிப்பு போகப் போற. அதனால, நல்லா படி & என்னைப் பத்தி மறந்துடு. ரொம்ப செல்ஃபோன்ல கேம் விளையாடாத. அப்பறம் அடிக்ட் ஆயிடுவ. அப்பா அம்மா உன்னையதான் நம்பி இருக்காங்க. அதனால் அவங்கள உற்சாகப்படுத்து. அவங்களை சோகமாக இருக்க விடாதே. உன்னோட சூழலை மகிழ்ச்சியா ஆக்கு. எப்பவுமே சந்தோஷமா இரு.

நீ நல்லவன் ஶ்ரீதர், நல்லா படி. உனக்கு திறமை இருக்கு. அதை வீணாக்காத. முட்டாளை போல வீணாக்காத. வாழ்க்கை போய்கிட்டே இருக்கணும், ஶ்ரீதர். அதனால, நகர்ந்து போய் கிட்டே இரு. அப்பா அம்மாவை நல்லா பார்த்துக்கோ. உன் ஹெல்த்தையும் நல்லா பார்த்துக்கோ, பை.

தேவிகா – நீதான் மிகச்சிறந்த சகோதரி. நீ என் மேல் ரொம்ப அன்பு வைச்சிருந்த. எனக்காக எல்லாம் செய்தாய். என்னை எப்பவுமே ஆதரித்தாய் & எப்பவுமே சிரிக்க வைத்தாய். என்னோட ஒவ்வொரு தருணத்தையும் சிறப்பாக ஆக்கினாய். நான் மதுரைக்கு வந்த பிறகு உன்னை ரொம்பவும் மிஸ் பண்ணினேன். நீ எப்பவுமே என்னோட இருந்தாய். ஐ லவ் யூ தேவிகா. பிளீஸ் சோகமாக இருக்காத தேவிகா. நல்லா சாப்பிடு. சாப்பிடாம இருந்து உன் ஹெல்த்த நீயே கெடுத்துக்காத. உன்கிட்ட குட்பை சொல்லாம உன்னை விட்டு போறதுக்கு என்னை மன்னிச்சிடு. என்னோடு ஒவ்வொரு தருணத்தையும் சிறப்பாக ஆக்கினது நீ. தேவிகா, நான் உண்மையிலேயே நல்லா படிச்சேன். ஆனா, எனக்கு மெடிக்கல் சீட் கிடைக்கலைன்னா எல்லோரையும் ஏமாற்றி விடுவேனோன்னு பயமா இருக்கு. என்னை மன்னிச்சிடு தேவிகா. ஶ்ரீதரை சோகமாக இருக்க விடாத.

நீயும் வருத்தமாக இருக்காத, மன்னிச்சிடு, என்னை மறந்துடு & மன்னிச்சிடு. பை, டீச்சர் அம்மா

எல்லோருக்கும்,

இது உங்க தப்பு இல்ல. உங்களையோ வேறு யாரையோ குற்றம் சொல்லாதீங்க. உங்க எல்லோர் மேலும் நான் அன்பு வைத்திருக்கிறேன். அம்மு, நீதான் என்னோட ஒரே நட்பு. நீ எப்போதுமே எனக்கு ஸ்பெஷல். நீ உன்னோட சரியான பாதையில் இருக்கிறாய். அதிலேயே போ. அம்மு உன்னை நேசிக்கிறேன். பை சாந்தினி.

செல்வி சித்தி, நீங்க என்னை மகள் போல நடத்தினீங்க. என்னை பார்த்துக்கிட்டீங்க, பாசம் வெச்சீங்க. அன்பு காட்டீனீங்க. உங்களை நேசிக்கிறேன் சித்தி. மன்னிச்சிடுங்க. பைபை மாமா. பை அத்தை, பை அம்முக்குட்டி, உன்னோட அன்பை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். பை தாத்தா, பை ஆச்சி.

நீங்க என் மேல ரொம்ப எதிர்பார்ப்பு வச்சிருந்தீங்க. மன்னிச்சிடுங்க. ஒரு வேளை எனக்கு சீட் காலேஜ்ல கெடைக்கலைன்னா, எனக்காக நீங்க பட்ட கஷ்டம்லாம் வீணா போயிடும். என்னை மன்னிச்சிடுங்க. என்னால முடியல!

யாராவது இந்த லெட்டரை பார்த்தா என்னோட பெற்றோர்கிட்ட கொடுத்திடுங்க

ஐ லவ் யூ அப்பா
ஐ லவ் யூ அம்மா

நல்லா பார்த்துக்கோங்க

ஶ்ரீதருக்கு நல்ல உலகத்தை கொடுங்க. அப்பா என் செயின நீங்க போட்டுக்கோங்க. எனக்கு அது ரொம்ப பிடிக்கும். அப்புறம் என் ஸ்லாம் புத்தகம் அருப்புக்கோட்டை வீட்டுல என் தாவணியோட இருக்கு. அதை எடுத்து வைச்சிக்கோங்க.

பை.

என் வீடியோவை நான் M20 ஃபோன்ல பதிவு செய்திருக்கேன். பிளீஸ் அதைக் கேளுங்க. எம்20 பீரோல லாக்கர் மேல உள்ள ஷெல்ஃப்ல துணிக்கு அடியில இருக்கும். பை.

அப்பா நான் கேடிராமாக்கள் (கொரியன் டிராமாக்கள்) பார்ப்பேன். உங்கட்ட சொன்னா திட்டுவீங்கன்னுதான் சொல்லல. பை.

அசல் கடிதத்தின் எழுத்து வடிவம்

If anyone see this, please please give it to my parents. When you are reading this, I may not be here. I am sorry, I am sorry.

I know sorry is not enough for my decision. But please forgive me.

PLEASE DONT BLAME YOURSELF IT’S NOT YOUR FAULT

இந்த 18 வருஷம் என்ன நீங்க ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டீங்க. You guys loved me very much. You did everything for me. You always supported me & stand by my side. You guys have many expectations in me. You believed me that I would help many people in the future.

அம்மா – நீங்க என்ன ரொம்ப ரொம்ப love பண்ணீங்க. I am sorry amma. You treasured me. என்னைய ரொம்ப பொக்கிஷம் மாதிரி பார்த்துக்கிட்டீங்க. நான் என்ன decision eduthalum support panninga. Nan evlo kovam pattalum, neenga ennaikume enna thituradhu ill. I love you Amma. I love you more than myself. I am sorry amma. It is not your fault. Please don’t blame yourself & don’t be sad.

Sridhar future depends on you. If you are sad, who will take care of him. Amma, forget everything about me. Please, MOVE ON PLEASE MOVE ON.

Neenga செய்யுற எல்லா சமையலும் எனக்கு ரொம்ப பிடிக்கும் amma. I love your icecream more. Please amma, sad ah irukathinga. If you are sad, I will not be happy.

அப்பா – I love appa. I love you, I love u appa. I love you more than anyone else. I respect you a lot. You did everything for me. You never cared about your pride. You stood up for me in every situation. You taught me, what is kindness, how to love everyone, how to learn good things. You protected me in my whole life. You always protected me in my whole life. You always cared for me. You are my hero. I learned many things from you. You expected a lot from me. Appa, I studied well. I got 590+ in the last mock test. But appa I’m afraid of exam.

I love you appa, But I am sorry. It is not your fault. It is my last wish PLEASE DONT BLAME YOU

Sridhar future depends on you appa. Please appa, dont be sad. Dont live in grief. Please move on. Please forget everything about me.

You are a heart patient. So please don’t be sad. It will affect your health. Night long travel ah avoid pannunga. Thaniya long distance travel pannathinga. Eppayum yarayathu kootite travel pannunga. Cell phone romba pakkathinga appa. Please don’t cry more. You can’t handle it. PLEASE DONT BE SAD. Eppavum neenga select panra dress than enaku suit agum. Diet ah vidathinga. Diet ah nalla follow pannung. Onga health than romba mukiyam. Sridhar 9th, 10th poga poran. Avana nalla pathukurathu depends on you. So, don’t be sad.

“You are the best father in the world, I would ever ask for. Again I am saying this => Your health is more important than anything else. So Night romba neram cell pakkama thoongunga.

Appa, marakkama check-up ponga regulara. Eppavum pola neenga happy ah irunga. Environment ah eppavum happy vachirukka ungalala mattum than mudiyum. Bye appa. I want to tell many things to you. But I don’t have time.

Sridhar – I love you Sridhar. I know you will miss me. I know you love me more. But I am really sorry Sridhar. You are the best brother.

I am a coward. I don’t deserve your love & respect. Appa amma va nalla pathukko. Don’t cry & sad for me. Nee mattum than appa amma ku irukka. Nee sad ah irunthena, avungalum sad ah irupanga. Nee periya payan agita. Higher studies poga para. So, study well & forget about me. Romba cellphone la game vilayadatha. Appram addict ayiduva. Appa amma unnaya than nambi irukanga. So, cheer them up. Don’t let them be sad. Make your environment happy. Always be happy.

You are kind, Sridhar, STUDY WELL. You have the talent. Don’t waste it. Don’t waste it like an idiot. Life should move on, Sridhar. So, move on. Appa amma va nalla pathukko. Un health ah yum, nalla pathukko bye.

Deviga – You are best sister. You loved me very very much. You did everything for me. You always supported me & always made me laugh. You made my every moments special. After I came to Madurai, I always missed you. You are always with me. I love you Deviga. Please don’t be sad, deviga. Nalla sapdu. Sapidama irunthu un health ah neeye keduthukadha. I am sorry that I am leaving you like this without saying good by. You made my every moments special. Deviga, I really studied well. But I am afraid, if I can’t able to get the medical seat, I will disappoint everyone. I am sorry deviga. Sridhar ah sad ah iruka vidatha.

Neeyum sad ah irukatha. Forgive me. Please forget about me & forgive. By, teacher amma.

To everyone,

It is not your fault, Don’t blame yourself and anyone. I love you all, Ammu, you are my only friend. You always special to me. You are in your right path. Go by that. I love you Ammu. By G Santhini. I’m for

Selvi Chiti, you treated me as your daughter, You cared for me. You loved me. I love you Chiti. I am sorry Bye Bye mama. Bye attai. Bye ammukutty I will never forget your love for me. By thatha, By achi.

நீங்க என் மேல ரொம்ப expectations வச்சிருந்தீங்க. I am sorry. ஒரு வேளை எனக்கு சீட் காலேஜ்ல கெடைக்கலைன்னா, all your hard works for me will go in vain. I am sorry. I am tired.

If any one see this letter. Please give this to my parents.

I LOVE YOU APPA
I LOVE YOU AMMA

PLEASE TAKE CARE OF YOURSELF.

Give Sridhar a better world. Appa en chain a neenga potukunga. I like it a lot. Appram en slam book Aruppukotta veetula en dhavani oda irukku atha eduthu vachikonga.

BYE.

I recorded my video in M20 phone. Please hear it. M20 பீரோ la locker mela ulla self la, துணிக்கு அடில irukkum. Bye.

Appa Nana kdramas (korean dramas) papen. Ungata sonna thituvinganu than Sollala. Bye.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்