“முருகக் கடவுள் எங்களைக் காப்பாற்றிவிட்டார். என் கணவர் முருக பக்தர். அவர் நம்பிக்கையின் பலனை நான் இன்று கண்டுகொண்டேன்” என்று மேல்மருவத்தூர் அருகே ஏற்பட்ட விபத்து குறித்து பாஜக உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு கருத்துத் தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பில் தமிழகம் முழுக்க வேல் யாத்திரை நடைபெற்றுவருகிறது. தமிழகத்தின் பல்வேறு அரசியல் காட்சிகள், இயக்கங்கள் “இது மதக் கலவரத்தைத் தூண்டும் பாஜகவின் திட்டம்” என்று கூறி எதிர்ப்புத் தெரிவித்தனர். யாத்திரை நடக்கும் போது கூட்டம் சேர்ந்து நோய்த்தொற்று ஏற்படும் என்பதால் தமிழக அரசு வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்தது. இந்த மறுப்பை எதிர்த்து பாஜக சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நீதிமன்றம் தமிழக அரசின் ஆணை செல்லும் எனத் தீர்ப்பு வழங்கியது.
கோயில் இல்லாத பகுதியில் யாத்திரை செல்வது ஏன்? – உயர்நீதி மன்றம் கேள்வி
இந்நிலையில் தடையை மீறி வேல் யாத்திரை நடத்தப்பட்டு வருவதாக, யாத்திரையில் ஈடுபடும் பாஜக தலைவர்களைக் காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.
’யாத்திரையில் பெரிய வேல் – ஆயுத சட்டப்படி குற்றம்’- உயர் நீதிமன்றம்
கார் விபத்து தொடர்பாக குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் “மேல்மருவத்தூர் அருகே ஒரு கன்டெய்னர் லாரி எங்கள் கார் மீது மோதியது. உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தாலும், இறையருளாலும் நான் பத்திரமாக உள்ளேன். கடலூர் வேல் யாத்திரைக்கான பயணம் தொடர்கிறது. காவல்துறையினர் விசாரிக்கின்றனர். முருகக் கடவுள் எங்களைக் காப்பாற்றிவிட்டார். என் கணவர் முருக பக்தர். அவர் நம்பிக்கையின் பலனை நான் இன்று கண்டுகொண்டேன்” என்று கூறியுள்ளார்.
Thank you so much for all the inquiries n good wishes. I feel indebted. I am safe n continuing my journey towards Cuddalore. Nothing has stopped me before this, nothing will stop me now either. Zindagi har kadam ek nayi Jung hai. Jeet jaayenge hum tu agar sang hai #VelYaatrai
— KhushbuSundar ❤️ (@khushsundar) November 18, 2020
ஊடகங்கள் தகவலைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுகிறேன். எனது கார் சரியான பாதையில்தான் பயணித்தது. கன்டெய்னர் லாரி வந்த திசை எங்களுக்குத் தெரியவில்லை. அந்த வாகனமே எங்களின் கார் மீது மோதியது. போலீஸார் இந்த விபத்தில் ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்து லாரி ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர்” என குஷ்பு தெரிவித்துள்ளார்.
.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.