Aran Sei

அரசு பணிகளில் வயது வரம்பு மாற்றம் – தமிழக அரசு அறிவிப்பு

credit : wikipedia

ரசுப் பள்ளி ஆசிரியர் பணிநியமனத்துக்கு வயது வரம்பு 40 ஆக நிர்ணயம் செய்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 44 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

1990-ம் ஆண்டு வரை அரசுப் பள்ளி ஆசிரியர் பணிநியமனத்துக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அதன்பின் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்றுப் பணி நியமனத்துக்கான வயதுவரம்பு நீக்கப்பட்டது.

இன்று அரசுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்துக்கு மீண்டும் வயது வரம்பு நிர்ணயித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், “அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நியமனம் செய்வதற்கான வயதுவரம்பு 40 ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது.”

“இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மட்டும் 5 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படும். இதுதவிர தலைமையாசிரியர் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகளாகப் பதவி உயர்வு பெற பள்ளி நிர்வாகத் திறன் தேர்விலும் ஆசிரியர்கள் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் ‘பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை’ யின் சில துறைகளில் நேரடியாகப் பணி நியமனம் செய்யப்படுகிறது.

இப்பணிகளுக்குக் குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 10- ம் வகுப்புக்குக் கூடுதலாகக் கல்வித் தகுதி இருக்கக்கூடாது என்பது நிபந்தனை.

இந்தப் பணிகளில் பணி நியமனம் பெற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் ஆகியோருக்கு உச்ச வயது வரம்பு 30 ஆக இருந்தது.

இன்று பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை வெளியிட்ட அறிக்கையில் உச்ச வயது வரம்பு 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பை வரவேற்று ‘தமிழ்நாடு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலக் கூட்டமைப்பு’ தலைவர் சேம.நாராயணன் நன்றி தெரிவித்துள்ளதாக இன்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்