Aran Sei

’பாமகவின் முதல்வர் வேட்பாளரை ராமதாஸ்தான் அறிவிப்பார்’ – பாமக தலைவர் ஜி.கே.மணி

தேர்தல் வரும் நேரத்தில், முதல்வர் வேட்பாளர் யார் என்று இராமதாஸ் அறிவிப்பார் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே நீடிப்பார் என்று அக்கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.

அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? – குளறுபடிக்கு முற்று வைத்த கே.பி. முனுசாமி

மேலும், சமீபத்தில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, “அதிமுக வின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்” என்று உறுதிபட தெரிவித்திருந்தார்.

அதிமுகவின் இந்த அறிவிப்பு குறித்து பாமக தலைவர் ஜி.கே.மணியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, “அந்த அறிவிப்பு அதிமுகவின் நிலைப்பாடு. இது கூட்டணிக் கட்சிகளுக்கு சம்பந்தமில்லாத நிலைப்பாடு. எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என்று அதிமுக அறிவித்துள்ளது. தேர்தல் வரும் நேரத்தில் எங்கள் நிலைப்பாடு குறித்து இராமதாஸ் அறிவிப்பார்.” என்று தெரிவித்துள்ளார்.

‘பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா?’ – பதிலளிக்க மறுத்த மத்திய அமைச்சர்

“தற்போது முதல்வர் வேட்பாளரில் மாற்றம் வருமா என்பது குறித்து ஊகத்தின் அடிப்படையில் சொல்லமுடியாது. தேர்தல் நெருங்கும்போது பிப்ரவரிவாக்கில் எந்தக் கட்சி, யார் எந்தப் பக்கம் இருப்பார்கள் என்று அப்போதுதான் தெரியும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில், “பாஜக அகில தேசியக் கட்சி என்பதால், அவர்களின் கொள்கைப்படி அகில இந்திய கட்சியின் தலைவர்தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்” என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ  கூறியிருந்தார்.

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? – அமைச்சர்களிடையே நிலவும் கருத்து முரண்பாடு

கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி, செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமியா என்ற  கேள்விக்கு பதிலளிக்க மறுத்திருந்தார்.

அதே நேரம், நேற்று (டிசம்பர் 30) தமிழக முதல்வர் வேட்பாளர் யார் என்பது தேர்தலுக்குப் பிறகே முடிவு எடுக்கப்படும் என்று பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்திருந்தார்.

’தமிழக முதல்வர் வேட்பாளரை தேர்தலுக்கு பின்பே அறிவிப்போம்’ – பாஜக மேலிடம்

விஜயகாந்த் தான் முதல்வர் வேட்பாளர் என்று தேமுதிகவும் ஏற்கெனவே அறிவித்துவிட்டது. ஆகவே, தமிழகத்தை பொறுத்தவரை, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வதில் மாறுபட்ட கருத்துகள் உள்ளது என்பது வெளிப்படையாகியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்