மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு உலகம் முழுக்க ஆதரவு பெருகி வருகிறது. தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் டாப்சி, சித்தார்த் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரக்காஷ் குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். போராடுவது மக்களின் உரிமை என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னர், உலகப் புகழ் பெற்ற பாப் இசைக் கலைஞரான ரிஹான்னா, விவசாயிகள் போராட்டக் களத்திற்கு இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது பற்றிய சிஎன்என் செய்தியைப் பகிர்ந்து, அதுபற்றி நாம் ஏன் பேசவில்லை என்று ட்வீட் செய்திருந்தார். விவசாயிகள் போராட்டத்தின் மீதான அரசு அடக்குமுறைக்கு எதிரான ரிஹான்னாவின் பதிவு, உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மனித உரிமைகள் மீறப்படும்போது ஒலிக்கும் அறத்தின் குரல் – இசைக்கலைஞர் ரிஹன்னா
அதனைத் தொடர்ந்து, விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகப் பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க், நடிகை மியா கலீஃபா உள்ளிட்ட பல வெளிநாட்டு பிரபலங்களும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து கூறிவருகின்றனர்.
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் இறையாண்மை விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ள முடியாது. வெளியிலிருக்கும் சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம். ஆனால் பங்கேற்பாளர்களாக இருக்க கூடாது. இந்தியாவைப் பற்றி இந்தியர்களுக்குத் தெரியும். இந்தியாவுக்காக இந்தியர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தேசமாக நமது ஒற்றுமையைப் பறைசாற்றுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.
மதுராவில் கோவிலை ஒட்டிய மசூதியை அகற்ற வேண்டும் : நீதிமன்றத்தில் மனு
மேலும், இதே கருத்தில், கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, ஆர்.பி.சிங், விராத் கோலி, பால் பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், நடிகர் அக்ஷய் குமார், பாடகர் லதா மகேஷ்கர் போன்றோரும் ட்வீட் செய்துள்ளனர்.
இதுகுறித்து நடிகை தாப்சி பன்னு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், “ஒரு ட்வீட் உங்களின் ஒற்றுமையையும், ஒரு நகைச்சுவை உங்களின் நம்பிக்கையையும் அல்லது ஒரு நிகழ்ச்சி உங்களின் மத நம்பிக்கையையும் ஆட்டம் காணச் செய்கிறதென்றால், நீங்கள் உங்களுடைய நம்பிக்கைகளை வலுப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்ய வேண்டுமே அன்றி, மற்றவர்களுக்கு ‘பிரச்சார ஆசிரியர்’ ஆகக் கூடாது” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
நடிகரும் காங்கிரஸ் தலைவர் சத்ருகன் சின்ஹாவின் மகளுமான சோனாக்ஷி சின்ஹா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதில், “இந்தச் சர்வதேச பிரபலங்கள் எழுப்பிய குரல்கள் எல்லாம் மனித உரிமை மீறல், இணைய சேவையை முடக்குவது, உணர்வுகள் வெளிப்படுத்தப்படுவதை அடக்குவது, அரசின் பிரச்சாரம், வெறுப்பை பரப்பும் பேச்சு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் பற்றியது” என்று கூறியுள்ளார்.
சோனாக்ஷி சின்ஹாவின் மற்றொரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், விவசாயிகள் போராட்டம் என்பது இந்தியாவின் உள் விவகாரம் என்ற வாதத்தை நிராகரித்துள்ளார். மேலும், “அவர்கள் வேற்றுகிரகவாசிகள் அல்ல. மனிதர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் நம் சக மனிதர்கள்.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
கிரேட்டா துன்பெர்க், மீனா ஹாரிஸ், ரிஹான்னா படங்களை எரித்து ஆர்ப்பாட்டம் – யுனைட்டட் ஹிந்து முன்னணி
இந்நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்களுக்குப் போராட உரிமை இருக்கிறது. மக்களின் விருப்பம் என்னவென்பதை அறிந்து அதைப் பாதுகாப்பதே அரசின் கடமை. புதிய வேளாண் சட்டங்களை ஏற்க சொல்லி மக்களைக் கட்டாயப்படுத்துவது தற்கொலைக்குச் சமம். உரிமைக்கான அவர்களின் போராட்டம் ஜனநாயகமானது” என்று தெரிவித்துள்ளார்.
people have the right to protest.
Government should protect the interest of the people,
Forcing farmers to accept the new laws is suicide.
People
Protesting for their rights and is democracy. அவர்கள் “ஏர்முனை கடவுள்” என்றழைத்தால் மட்டுமே நமை படைத்தவனும் மகிழ்வான்…— G.V.Prakash Kumar (@gvprakash) February 5, 2021
மேலும், அவர்கள் ”’ஏர்முனை கடவுள்’ என்றழைத்தால் மட்டுமே நமை படைத்தவனும் மகிழ்வான்” என்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.