Aran Sei

’அதிமுக தலைமையை ஏற்பவர்களுக்கே கூட்டணியில் இடம்’ – எடப்பாடி பழனிசாமி

ரும் சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்றும், அதை ஏற்பவர்கள் தான் கூட்டணியில் இருப்பார்கள் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

நேற்று (டிசம்பர் 31) மாலை திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

’பாமகவின் முதல்வர் வேட்பாளரை ராமதாஸ்தான் அறிவிப்பார்’ – பாமக தலைவர் ஜி.கே.மணி

அப்போது,“அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்றும், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் கே.பழனிசாமி என்றும் ஏற்கெனவே கட்சித் தலைமையால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.” என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

”அதிமுக கூட்டணியில்தான் பாஜக உள்ளது. ஏற்கெனவே அறிவித்தவாறு அதிமுக தலைமையை ஏற்பவர்கள் கூட்டணியில் இருப்பார்கள். அதிமுக கூட்டணியில் ஏற்கெனவே உள்ள கட்சிகள் இப்போதும் உள்ளன. தேர்தல் நெருங்கும்போதுதான் அதிமுக  கூட்டணியில் புதிய கட்சிகள் வருமா என்று தெரியும்.” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

’தான் ‘ முதல்வர் வேட்பாளர்’ என்று பழனிசாமி மட்டும் தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்’ – ஸ்டாலின்

தேர்தலுக்கான தேதி அறிவிப்புக்குப் பிறகே அதிமுக கூட்டணியின் கூட்டம் நடைபெறும் என்றும் காலம் குறைவு என்பதாலேயே இப்போதே பிரச்சாரம் தொடங்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “சசிகலா வெளியே வந்த பிறகு என்ன நடக்கும் என்பதை இப்போது ஊகமாகக் கூறமுடியாது. எங்களைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் இருக்காது. பாஜகவுடன் இருப்பதால் அதிமுகவுக்கு சிறுபான்மை வாக்குகள் கிடைக்காமல் போகாது. காரணம், ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உண்டு. கொள்கை வேறு. கூட்டணி வேறு. தேர்தல் வெற்றிக்காகவே கூட்டணி வைக்கப்படுகிறது.” என்று அவர் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்