Aran Sei

முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் – நடவடிக்கை எடுக்க திமுக மனு

முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் அடங்கிய மனுவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

இன்று (டிச. 22) திமுக தலைவர் ஸ்டாலின், அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கட்சியின் செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்துள்ளனர். அப்போது, முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை மீது 97 பக்க ஊழல் புகார்கள் அடங்கிய மனு அளித்துள்ளனர்.

’நான் ஏ டீம்; ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு சொல்கிறேன் – கமல்ஹாசன் ஆவேசம்

அதில் முதலாவதாக, முதல்வர் பழனிசாமி, தனது நெருங்கிய உறவினர்களுக்கு 6,133.57 கோடி ரூபாய் மதிப்பிலான 6 நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களைக் கொடுத்ததாகவும் கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு கூடுதலாக வழங்கிய இலவச அரிசியை வெளி மார்க்கெட்டில் விற்று முறைகேடாக பணம் சம்பாதித்து அரசுக்கு 450 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், 200.21 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக தனது உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் 19 சொத்துக்களை வாங்கி ஊழல் செய்ததாகவும் புகாரளிக்கப்பட்டுள்ளது.

`சூரப்பா, 280 கோடி ரூபாய் ஊழல் செய்தாரா’ – விசாரணை தொடக்கம்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘காக்னிசன்ட்’ நிறுவன கட்டுமான அனுமதி ஊழல் உள்ளிட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்து ஊழல் செய்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 9 பினாமி நிறுவனங்களை வைத்து, அதிக விலைக்கு கிராம ஊராட்சி மன்றங்களுக்கு எல்.இ.டி விளக்கு கொள்முதல் செய்து 875 கோடி ஊழல் செய்துள்ளதாகவும் மின்வாரியத்துறை அமைச்சர் பி.தங்கமணி, நிலக்கரி இறக்குமதி, தரமற்ற நிலக்கரி வாங்கியது, போலி மின்சாரக் கணக்கில் ஊழல் உள்ளிட்ட 950.26 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

‘வெங்காயத்திலும் ஊழல் வேண்டாம்’ – மு.க.ஸ்டாலின் ட்வீட்

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் மீது கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிய இலவச அரிசியை வெளிமார்க்கெட்டில் விற்று முறைகேடாக பணம் சம்பாதித்து ஊழல் செய்ததாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அரசு அதிகாரிகள் மாறுதல்கள் மற்றும் நியமனங்களுக்காக 20.75 கோடி ரூபாய் லஞ்சம் பெற்று வைத்திருந்த கவர்கள் வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டது என்றும் புதுக்கோட்டையில் கல் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக கல் வெட்டியெடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி ஊழல் செய்ததாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

விவசாயிகள் நிதி உதவித் திட்டம்: தமிழகத்தில் நடந்த ரூ.110 கோடி ஊழல்

வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது 1,950 கோடி ரூபாய் பாரத் நெட் டெண்டர் ஊழல் புகாரும் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் மீது மீனவர்களுக்கு வாக்கி டாக்கி கொள்முதல் செய்ததில் 30 கோடி ரூபாய் ஊழல் புகாரும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி மீதும், எட்டு அமைச்சர்கள் மீதும் 2018 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டிடுமாறு, ஆளுநரிடம் திமுக வலியுறுத்தியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்