சமீபத்தில் ஓடிடியில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம், சினிமா ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்நிலையில் “உன் வெற்றியின் பெருமிதத்தில் நான் தொப்பியை மாட்டிக்கொண்டு சொல்கிறேன் “HATS OFF TO YOU MY DEAR SURIYA”. என்று நடிகர் சூரியாவுக்கு, இயக்குநர் வசந்த் தான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
1997 ஆம் ஆண்டு `நேருக்கு நேர்’ திரைப்படத்தின் மூலம் சூர்யாவை கதாநாயகனாக அறிமுகப்படுயவர் இயக்குநர் வசந்த். அதன்பின் காதலே நிம்மதி, பூவெல்லாம் கேட்டுப்பார் ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்துவந்தார். திரையுலகில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த சூர்யா, தனது கடின உழைப்பால் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறார்.
சூரரைப் போற்று – நிழல், நிஜம் மற்றும் மேக்கிங் – இரா.முருகவேள்
சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையுலகினர் பலரும் இந்தப் படத்தைப் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் சூர்யாவை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்த இயக்குநர் வஸந்த், சூரரைப் போற்று படத்தைப் பாராட்டி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அந்தக் கடிதத்தில், ”அன்புள்ள சூர்யாவுக்கு, இந்தப் பாராட்டுக் கடிதம் உனக்கு இல்லை, நெடுமாறன் ராஜாங்கத்திற்கு. முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை உன் ஆட்சிதான். காட்சிக்கு காட்சிக்கு உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறாய்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ்த் திரையுலகில் என் மூலம் நிகழ்ந்த உன் அறிமுகத்திற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நீயாகவே முயன்று கற்றுக்கொண்டு மிகச்சிறப்பாக உன் நடிப்பை இதுவரை பல படங்களில் வெளிப்படுத்தியிருந்தாலும் இதுதான் உன் உச்சம்’ இப்போதைக்கு!! நெடுமாறன் ராஜாங்கமாக நீ நடிக்கவே இல்லை, ரத்தமும் சதையுமாக உணர்ந்து வாழ்ந்திருக்கிறாய்” என்று தெரிவித்துள்ளார்.
“முதல் காட்சியின் ஆரம்பம் கூட பரவாயில்லை. இறுதியில் நீ வென்ற பிறகு கூட உன் முகத்தில் சிரிப்பு இல்லை. அந்தத் தீவிரத்தன்மை, அதைச் சாதிக்க வேண்டும் என்ற வெறி உன் கண்களில் இறுதிவரை தெரிகிறது. கனல் மணக்கும் பூக்களாக… ஒவ்வொரு காட்சியிலும் நெடுமாறன் தோற்கும்போது ஒவ்வொரு காட்சியிலும் ஜெயிக்கிறது உன் நடிப்பு. எவ்வளவு இயல்பாக அதுவும் இவ்வளவு இயல்பாக, எதார்த்தமாக துளி மிகையில்லாமல் ஒரு கதாபாத்திரத்துக்கு மிகச் சிறப்பாக உயிரூட்டியிருக்கிறாய்.” எனக் கூறியுள்ளார்.
“உன் வெற்றியின் பெருமிதத்தில் நான் தொப்பியை மாட்டிக்கொண்டு சொல்கிறேன் “HATS OFF TO YOU MY DEAR SURIYA”. என்னை விட யாருக்கு மகிழ்ச்சி இருந்துவிட முடியும். ஏனென்றால் என் விதை நீ, என் விருட்சம் நீ. எனக்கு எத்தனை பெருமிதம் என்று எழுதி முடியாது. உச்சி முகர்ந்து மகிழ்கிறேன்”.
இவ்வாறு இயக்குநர் வஸந்த் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.