Aran Sei

’நாங்கள் இயேசுநாதரை சுட்டுக் கொன்ற கோட்சேவா?’ – வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

பொங்கல் பரிசு தொடர்பாக திமுகவின் குற்றச்சட்டை பற்றி பேசும்போது, நாங்கள் என்ன இயேசுநாதரை சுட்டுக் கொன்ற கோட்சேவா என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று (டிசம்பர் 29) திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முள்ளிப்பாடி, தாமரைப்பாடி, பாலகிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் மினி கிளினிக்குகளை,  தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்துள்ளார்.

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? – அமைச்சர்களிடையே நிலவும் கருத்து முரண்பாடு

அதைத்தொடர்ந்து, விழா மேடையில் பேசிய அவர், “2500 ரூபாய் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு கொடுப்பதை திமுக எதிர்க்கிறது. திமுக ஆட்சியிலும் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. நாங்கள் மட்டும் என்ன இயேசு நாதரை சுட்ட கோட்சே வாரிசா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

’இயேசு நாதரை சுட்ட கோட்சே வாரிசு’ என்று அமைச்சர் கூறியதை அடுத்து, கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

`அதிமுகவை எம்ஜிஆர், ஜெயலலிதா மன்னிக்கமாட்டார்கள்’ – திருமாவளவன்

தேர்தல் நெருங்குவதை மனதில் வைத்து தான், 2500 ரூபாயை பொங்கல் பரிசை அதிமுக அரசு அறிவித்துள்ளது என்று திமுக குற்றச்சாட்டியிருந்தது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்