Aran Sei

நீட்டுக்கு எதிரான நடைப்பயணத்திற்கு அனுமதி மறுப்பு – தடையை மீறி கலந்து கொண்டவர்களை கைது செய்த காவல்துறை

நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி உயிரிழந்த அனிதாவின் நினைவு இல்லத்திலிருந்து சென்னை வள்ளுவர் கோட்டம் வரை செல்லவிருந்த நீட்டுக்கு எதிராகப் பரப்புரை நடைப்பயணத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். அதையும் மீறி நடைப்பயணத்தில் பங்கேற்றவர்களைக் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது.

நீட் விலக்கு மசோதா – ஆளுநரின் கடிதத்தில் இருந்தது என்ன?

இது சம்பந்தமாக நடைப்பயணத்தில் பங்கேற்றவர்களிடம் அரண்செய் தொடர்பு கொண்டு பேசினோம். அதில், “நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு ஏப்ரல் 1 முதல் 8 வரை நீட் தேர்வுக்கு எதிரான பரப்புரை நடைப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அதில், இந்த நடைப்பயணத்திற்கு வாய்வழி ஒப்புதல் அளித்திருந்த காவல்துறையினர் திடீரென்று அனுமதி மறுத்துள்ளதோடு, தடையை மீறிக் கலந்து கொண்டவர்களைக் கைது செய்து மண்டபத்தில் அடைத்தது வைத்துள்ளதாக” நடைப்பயணத்தில் பங்கேற்றவர்கள் அரண்செய்- யிடம் தெரிவித்துள்ளனர்.

நீட்டுக்கு எதிரான போரில் தமிழ்நாடு வெல்லும் – அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் உரை

நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வினால் இதுவரை தமிழ்நாட்டில் 23 மாணவர்கள் தங்களது இன்னுயிரை ஈந்துள்ளார். மாணவர்களின் உயிரைக் காவு வாங்குவதாக மட்டுமில்லாமல், தமிழ்நாட்டின் சுகாதார கட்டமைப்பையும் சீர்குலைப்பதாக நீட் தேர்வு உள்ளது.

நீட் தேர்வினால் தமிழ்நாட்டின் கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதை உணர்ந்து 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டைத் தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. ஆனால் அந்த 7.5 விழுக்காட்டை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடந்து வருகிறது

நீட் தேர்வு குறித்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – முக்கிய அம்சங்கள் என்ன?

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் இயற்றிய தீர்மானத்தை ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசு மறுபடியும் இயற்றிய தீர்மானத்திற்கு ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி இந்த நடைப்பயணத்தை துவங்கத் திட்டமிட்டுள்ளோம்.

ஏப்ரல் 8 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில், நீட் தேர்வுக்கு எதிரான ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்த இந்த கூட்டமைப்பு முடிவு செய்திருந்தது” என்று நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்