Aran Sei

‘பாஜகவின் சித்து விளையாட்டில் பலிகடா ஆகாத ரஜினி’ – ஜி.ராமகிருஷ்ணன்

ஜினியை பலிக்கடாவாக்க நினைத்த பாஜகவின் சித்து விளையாட்டு மிகப்பெரிய தோல்வியை அடைந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவதற்காக, ஜனவரி மாதம் கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், “கட்சி தொடங்கவில்லை; அரசியலுக்கு வரமுடியவில்லை, மன்னியுங்கள்!” என்று நேற்று (டிசம்பர் 29) அறிக்கை வெளியிட்டார்.

“அரசியலுக்க வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்” – ரஜினி மீண்டும் பல்டி

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், “அதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று, பாஜக தலைவர்கள் அவரை நிர்பந்தப்படுத்தி கட்சி ஆரம்பிக்கச் சொல்லி அதன் மூலம் அவர்களுக்கு அரசியல் ஆதாயம் தேட நினைத்தார்கள். குறிப்பாக, அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று கருதக்கூடிய வாக்காளர்கள், ஆட்சி மாற்றம் என்கிற கோஷம் வைப்பதன் மூலம் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பிரிப்பது. அந்த எதிர்ப்பு வாக்குகளை ரஜினியை வைத்து கவர்வதன் மூலம் தங்களுக்குச் சாதகமாக அமையும் என்ற அடிப்படையில் பாஜக தலைவர்கள் யோசித்தார்கள்.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

டிகோடிங் ரஜினிகாந்த்: அரசியல் ஹீரோவா? வில்லனா? – மகிழ்நன் பாம

“பிகாரில் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, நிதிஷ் குமார் கட்சியை எதிர்த்து போட்டியிட்டது. ஆனால், எந்தெந்த தொகுதியில் பாஜக போட்டியிடுகிறதோ, அங்கெல்லாம் அவரை ஆதரித்தது. அப்படிப்பட்ட ஒரு சித்து விளையாட்டை நடத்தி பாஜக, ரஜினியைப் பலிகடாவாக்க நினைத்தது. ஆனால், தற்போது ரஜினி கட்சி தொடங்கவில்லை என்று சொல்லிவிட்டார். இதற்குக் காரணம் கொரோனா மட்டும் இல்லை.” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஜினி தேர்தல் அறிக்கை : 90ஸ் கிட்ஸ் முதல் ரிடயர்ட் நடிகர்கள் வரை-யார் யாருக்கு என்னென்ன

இரண்டாவது விஷயம், இன்றைக்கு அகில இந்திய அளவில் மத்தியில் ஆளக்கூடிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அனேகமாக எந்தக் கட்சியும் கூட்டணியில் இல்லை, அனைத்துக் கட்சிகளும் விலகிவிட்டன என்றும் “பிகாரில் மட்டும் நிதிஷ் குமார் நிர்பந்தத்தின் பேரில் முதல்வர் பதவியை ஏற்றேன் என்று சொல்லியிருக்கிறார். கேரளாவில் உட்பட பல மாநிலங்களில் பாஜக-வின் செல்வாக்கு குறைந்து வருகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

பீகார் தேர்தல் முடிவுகள் – கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன? – நவநீத கண்ணன்

ரஜினியின் இந்த முடிவானது, பாஜகவின் சித்து விளையாட்டின் மிகப்பெரிய தோல்வி என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்