Aran Sei

’விவசாயி மகனின் அரசு போராடும் விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவுகிறது’ – இரா.முத்தரசன் கண்டனம்

போராடும் விவசாயிகள் மீது தமிழக காவல் துறை அடக்குமுறையை ஏவுகிறது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (டிசம்பர் 29) அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய அரசின் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் 33-வது நாளாக விவசாயிகள் போராடி வருகிறார்கள் என்றும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழு சார்பில் இன்று (டிசம்பர் 29) தஞ்சாவூரில் பேரணிபொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஒன்றிணையும் இந்திய விவசாயிகள் : விவசாய சட்டத்திற்கெதிராகத் தீவிரமடையும் போராட்டம்

“போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு காட்டும் மிகச் சாதாரண ஜனநாயக உரிமையைக் கூட அனுமதிக்க மறுக்கும்விவசாயி மகன்அரசு காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவி விவசாயிகள் நலனை வஞ்சித்துள்ளது.” என்று விமர்சித்துள்ளார்.

அரசின் அடக்குமுறைச் செயலுக்கு கொரோனா நோய்த்தொற்றை ஆயுதமாகப் பயன்படுத்துவது மிக தரம் தாழ்ந்த செயலாகும் என்று இரா.முத்தரசன் கண்டித்துள்ளார்,

பிரிவினையை தூண்டியதாக சீக்கியர் கைது – விவசாயிகள் போராட்டம் நடைபெறும் நிலையில் நடவடிக்கை

மேலும்,தஞ்சாவூர் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு செல்லும் பிற மாவட்ட விவசாயிகளை அவரவர் புறப்பட்ட இடங்களில் கைது செய்வதுவிவசாயிகள் வாடகைக்கு அமர்த்தியுள்ள வாகன உரிமையாளர்களிடம் வாகனங்களை பறிமுதல் செய்வதாக மிரட்டி ரத்து செய்ய வைத்ததுவிவசாயிகள் இயக்கத் தலைவர்கள் வீடுகளுக்கு சென்று பெண்களிடம்விசாரிப்புஎன்ற பெயரில் அச்சுறுத்துவது போன்ற சட்ட அத்துமீறலில் காவல்துறை ஈடுபடுகிறது. இதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம் : பகுதி பகுதியாக நடைபெறும் உண்ணாவிரதம்

இதன் மீது முதல்வர் நேரடியாக தலையிட்டு தஞ்சாவூர் பொதுக்கூட்டம் அமைதியாக நடந்து முடிய அனுமதிக்க வேண்டும் என்று கட்சியின் சார்பாக வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்