Aran Sei

நீதிபதிகள் குறித்த சர்ச்சை பேச்சு – மன்னிப்பு கோரிய ‘துக்ளக்’ குருமூர்த்தி

டந்த ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் நீதிபதிகளின் நியமனங்கள் குறித்து அவதூறாகப் பேசினார் குருமூர்த்தி. எதிர்ப்புகள் வந்த்தைத் தொடர்ந்து தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

துக்ளக் வார இதழின் 51வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில், துக்ளக் இதழின் ஆசிரியர், வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது, வாசகர் ஒருவர், ஊழல் மற்றும் லஞ்சம் குறித்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார்.

“சேரிகளின் குடியரசுத் தலைவர்” – உகாண்டா அரசியலை உலுக்கிய பாபி வைன்

அதற்கு பதில் அளித்த குருமூர்த்தி, தயாநிதி மாறன் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, அவருடைய வீட்டிற்கு விதிகளை மீறி தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தது தொடர்பான முறைகேடு புகாரை, உதாரணமாக எடுத்துக்கொண்டு பேசினார்.

அந்த வழக்கில், தொலைபேசி இணைப்பைக் கொடுப்பதற்கு செலவழிக்கப்பட்ட தொகையை, குற்றம்சாட்டப்பட்டவர்கள் கொடுப்பதாக ஒப்புக்கொண்டதால், உயர் நீதிமன்றமும் பிறகு உச்சநீதிமன்றமும் அவர்களை விடுவித்ததாக குருமூர்த்தி கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் “லஞ்சம், ஊழல் செய்தவர்களுக்கு உச்சநீதிமன்றம் கருணை காட்டுகிறது. ஆகவே, லஞ்சம், ஊழல் எப்படி குறையும். ஏனென்றால் நீதிபதிகள் அனைவரும் அரசியல்வாதிகளால் நியமிக்கப்பட்டவர்கள். யார் மூலமோ, யார் காலையோ பிடித்துதான் பலபேர் நீதிபதிகளாக வந்துள்ளனர். இது நாம் வருத்தப்பட வேண்டிய விஷயம்” என்று கூறினார்.

அரசின் ரகசியம் அர்னாபுக்கு தெரிந்தது எப்படி? – ராஜ்நாத் சிங்கிடம் கேள்வி எழுப்பிய ப.சிதம்பரம்

மேலும் “தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் வந்தால் இப்படி ஒரு நிலைமை ஏற்படாது. ஆகவே, அரசாங்கம் மாறுவதால் மட்டுமே ஊழல்வாதி பிடிபடமாட்டான். போலீஸ், சிபிஐ, நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று அனைத்திலும் மாற்றம் வந்தால்தான், ஊழல்வாதிகள் சிறைக்கு போவார்கள்” என்றும் குருமூர்த்தி கூறினார்.

1987ஆம் ஆண்டு, ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, போஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து பேசிய குருமூர்த்தி “போஃபர்சில் கையும் களவுமாக பிடித்தோம். ஆனால், ஆட்சி மாறியதில், நீதிமன்றம் மாறியது. யாரை கையும் களவுமாக பிடித்தோமோ அவர்கள் தப்பித்துக்கொண்டார்கள். ஆகவே, ஊழலை கண்டுபிடித்து சிறைக்கு அனுப்புவது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை” என்று கூறினார்.

பட்ஜெட் கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் – எதிர்கட்சிகள் ஒன்றிணைய சிபிஎம் கோரிக்கை

குருமூர்த்தியின் பேச்சு, நீதித்துறைக்கே களங்கம் விளைவிக்கும் செயல் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், , நீதிபதிகள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்கு குருமூர்த்தி தனது ட்விட்டர்  பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். அதில்,”நீதிபதி பதவிக்கு விண்ணப்பித்தோர் என கூறுவதற்கு பதில், நீதிபதிகள் என்று குறிப்பிட்டு விட்டேன். நீதித்துறை, நீதிபதிகள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்’ என்று துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி விளக்கம் அளித்திருக்கிறார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்