Aran Sei

ஒப்பந்ததாரருக்கு எதிராக துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்

ப்பந்ததாரர் ஒருமையிலும், தகாத வார்த்தைகளில் திட்டுவதாகவும், நியாயமான ஊதியம் வழங்குவதில்லை எனக்கூறியும் கள்ளக்குறிச்சியில் துப்புரவுத் தொழிலாளர்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி நகராட்சியில் 124 துப்புரவுத் தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா நெருக்கடிக காலத்தில் அதிக பணிச்சுமையோடு பணிபுரிந்து வருகின்றனர்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக துப்புரவுப்பணி செய்து வரும் இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தப் பணியாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஒப்பந்ததாரர் விக்னேஷ் என்பவர் துப்புரவு பணியாளர்களை ஒருமையில் அழைப்பதோடு, தகாத வார்த்தைகளில் திட்டுவதாகவும், நிர்ணயிக்கப்பட்ட ஊதியமான 10,500 ரூபாயை வழங்காமல் 6-7 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்குகிறார் என்றும் துப்புரவுப் பணியாளர்கள் குற்றம் சாட்டினர். மேலும், குறைவான ஊதியம் வழங்குவது பற்றி கேள்வி கேட்பவர்களை வேலையை விட்டு நீக்கி விடுவேன் என மிரட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இச்சூழலில், தங்களுக்கு உரிய ஊதியமும், மரியாதையாக தாங்கள்  நடத்தப்பட வேண்டும் எனவும் கூறி கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் துப்புரவுத் தொழிலாளர்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களது பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் சார்பில் உறுதியளிக்கப்பட்ட பின் போராட்டம் கைவிடப்பட்டது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்