Aran Sei

வாரம் ஒருமுறை பேரறிவாளனை அற்புதம்மாள் சந்திக்கலாம் – சென்னை உயர் நீதிமன்றம்

னவரி 19-ந்தேதி வரை வாரம் ஒருமுறை பேரறிவாளனைச் சந்திக்க அற்புதம்மாளை அனுமதிக்க வேண்டும் என்று சிறைத்துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் பேரறிவாளன் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் உடல் நலம் சரியில்லாமல் பரோலில்  வெளியில் வந்த பேரறிவாளன், கடந்த 7-ந்தேதி மீண்டும் சிறைக்குள் சென்றார்.

பேரறிவாளன் பரோல் நீட்டிப்பு – மறுப்புத் தெரிவித்த தமிழக அரசு

இதைத் தொடர்ந்து, பேரறிவாளனைச் சந்திக்க அற்புதம்மாளுக்கும்,  உறவினர்களுக்கும் அனுமதி வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 23) இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, கொரோனா காலம் என்பதால் பேரறிவாளனின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரை காணொலி காட்சி வாயிலாக சந்திக்க அனுமதிக்க முடியும். ஆனால் பேரறிவாளனின் வழக்கறிஞர் என்றுக்கூறி பலர் கும்பலாக சந்திக்க வருவதாக சிறைத்துறை தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள்’ – தமிழகத்தில் உரக்க ஒலிக்கும் குரல்கள்

இதையடுத்து, உறவினர்கள், நண்பர்களை கணொலி காட்சி வாயிலாக சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்களைப் பொருத்த வரை அவர்கள் பெயர் பட்டியலை சிறை நிர்வாகத்திடம் கொடுக்கும் பட்சத்தில் அதில் யாரை அனுமதிப்பது என்பதை சிறை சூப்பிரண்டு முடிவு செய்வார் என தெரிவித்துள்ளனர்.

மகனின் விடுதலை நாளை எண்ணி நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் – அற்புதம் அம்மாள்

மேலும், அற்புதம்மாளை பொருத்தவரை அவர் தனக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை பரிசோதித்து மருத்துவ சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என்றும் அதன் அடிப்படையில் வருகிற ஜனவரி 19-ந்தேதி வரை வாரம் ஒருமுறை பேரறிவாளனை சந்திக்க அற்புதம்மாளை அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்