Aran Sei

தில்லி : போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்துங்கள்’ – உச்ச நீதிமன்றத்தில் மனு

தில்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று (டிசம்பர் 4) தில்லியைச் சேர்ந்த சட்ட மாணவர் ரிஷாப் சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ” உச்ச நீதிமன்றம் , அஷாஹீன் பாக் வழக்கில், பொதுப் பாதைகளைத் தடுத்து போராட்டம் நடத்தி, பயணிகளுக்குப் பெரும் இடைஞ்சல் ஏற்படுத்தும் போராட்டங்களை அனுமதிக்க முடியாது என்றும், கட்டுப்பாடற்ற  அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியிருக்க கூடாது என்றும் கூறியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி இந்து கூறியுள்ளது.

விவசாயிகள் போராட்டம்: `ஷாஹீன் பாக் பாட்டி கைது’

“விவசாயிளின் இந்தப் போராட்டத்தைத் தடுக்க முடியாது. ஆனால், எதிர்காலத்தில் இதுபோன்ற போராட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்றும் ஷாஹீன் பாக் வழக்கில், போராட்டக்காரர்கள் பொது இடங்களை காலவரையின்றி ஆக்கிரமித்தனர்.” என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

மேலும், “கடந்த அக்டோபர் மாதம், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், ஷாஹீன் பாக்கில், பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் பொதுச் சாலைகளைத் தடுத்து, குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் செய்து வருகிறார்கள். மீண்டும் இது போல போராட்டங்கள் நடக்காது என்று தெரிவித்திருந்தது.” என்பதை மேற்கோள்காட்டியுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் – கட்டவிழ்த்து விடப்படும் ஒடுக்குமுறை

போராட்டங்களை அமைதியாக நடத்த அரசு, புராரியில் உள்ள நிரங்கரி மைதானத்தை ஒதுக்கியிருந்தாலும், தொடர்ந்து தில்லி எல்லைகளில் சாலைகளைத் அடைத்து, போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் முடிவிற்கு எதிராக மனுதாரர் வாதிட்டுள்ளார்.

இதனால், தில்லியில் கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு இது பெரும் சவாலாக அமைந்திருப்பதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், அவசரகால சிகிச்சைகளுக்கும், மருந்துகளுக்கும், வெளிமாநிலங்களில் இருந்து, தில்லிக்கு வர சிரமமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்