Aran Sei

பசுமை தீர்ப்பாயத்தில் கிரிஜா வைத்தியநாதன் – விதி மீறப்பட்டதாக உயர்நீதி மன்றத்தில் வழக்கு

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக, தமிழக  முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதை தவிர்க்கவும், சுற்றுசூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு கிடைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் 2010 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வு டெல்லியில் உள்ளது. கிளை அமர்வுகள் சென்னை உட்பட நான்கு நகரங்களில் உள்ளன.

`ஈஷா விழாக்களை தடை செய்ய வேண்டும்’ –  வழக்கறிஞர் எம்.வெற்றிச்செல்வன்

அன்மையில், பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினர்களாக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கிரிஜா வைத்திநாதன், சத்யகோபால் மற்றும் ஐ.எஃப்.எஸ் அதிகாரி அருண்குமார் வர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

நேற்று (டிசம்பர் 22), கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட மனுவில், நிபுணத்துவ உறுப்பினருக்கு சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் 5 ஆண்டுகள் அனுபவமும் இருக்க வேண்டும் என்பது தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் கிரிஜா வைத்தியநாதன் 3 ஆண்டுகள் 6 மாதம் மட்டுமே  சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதால் அவரது நியமனம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.

பசுமை தீர்ப்பாய உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் – சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு

இந்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த குறித்து, வழக்கு தொடுத்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வனுடம் அரண்செய் பேசிய போது, “தேசிய பசுமை தீர்பாயம், 2010 சட்டம், 5 மற்றும் 6 பிரிவில், அமர்வின் தலைவர், நீதித்துறை உறுப்பினர் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர்களின் நியமனங்கள் குறித்து கூறப்பட்டுள்ளன.  அமர்வு தலைவர் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்க வேண்டும். சட்டத்துறை உறுப்பினர் ஒய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்க வேண்டும்.” என்று கூறினார்.

அறிவியல் மாநாட்டில் மத பிரச்சார அமைப்புகளா? – சு.வெங்கடேசன் கேள்வி

“நிபுணத்துவ உறுப்பினரின் கல்வித் தகுதியாக அறிவியல் பட்டப்படிப்பில் முதுகலையுடன் முனைவர் பட்டமும் பெற்றிருக்க வேண்டும். அனுபவரீதியாக சுற்றுச்சூழல் நிறுவனங்களில் விஞ்ஞாணியாகவோ, பேராசிரியராகவோ பதினைந்து ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் அல்லது நிர்வாகத் துறையில்  பதினைந்து ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். அதில் ஐந்து ஆண்டுகள் சுற்றுச்சூழல் நிறுவனங்களின் நிர்வாகத்துறையில் பணியாற்றியிருக்க வேண்டும். அந்த விதியின் கீழ் தான் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.” என்றும் தெரிவித்தார் .

கேரள ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கோல்வால்கரின் பெயர் – வலுக்கும் எதிர்ப்பு

மேலும், ”அவர் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக மூன்றரை ஆண்டுகள் மட்டுமே இருந்துள்ளார் என்றும் தேசிய பசுமைதீர்பாயத்தின் நியமண விதிகளுக்கு புறம்பாகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் குற்றம்சாட்டினார்.

“தேசிய பசுமை தீர்பாயம் இந்த விதிகளை உருவாக்கியதன் நோக்கமே, சுற்றுச்சூழலில் சார்ந்த வழக்குகளை, அனுபவத்துடனும், துறைரீதியான திறனுடனும், அறிவியல் பார்வையுடனும் அதை கையாள வேண்டும் என்பதால் தான். ஆனால், இந்த நியமனத்தில் இவை மீறப்பட்டுள்ளது.” என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் தெரிவித்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்