Aran Sei

‘சிஏஏ-என்ஆர்சி-க்கு எதிராக போராடுபவர்களை வேட்டையாடுகிறார்கள்’ – கேம்பஸ் ஃப்ரண்ட் குற்றச்சாட்டு

ஆர்.எஸ்.எஸ்-க்காக வேலை செய்வதை அமலாக்கத்துறை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் எல்.அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இன்று (டிசம்பர் 17) எல்.அப்துர் ரஹ்மான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, ”கேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பொதுச் செயலாளர் ரவூப் ஷரீப்பை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து அநியாயமாக கைது செய்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது. அண்மையில், சங்க் பரிவாரின் எதிர் கருத்தாளர்களையும், அரசியல் எதிரிகளையும் வேட்டையாட மத்திய அரசு அமலாக்கத்துறையைப் பயன்படுத்தி வருகிறது.” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

சிஏஏ எதிர்ப்பு போராட்டம் – 11 மாதங்களுக்குப் பின் சிறையிலிருந்து மீண்ட சிறுவன்

அரசு நிறுவனங்கள் சங்க் பரிவாரின் சிப்பாய்களாக மாறுவதைத் தடுக்கும் பொறுப்பு ஜனநாயகவாதிகளுக்கு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம்  மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதற்காக கேம்பஸ் ஃப்ரண்டின் தலைவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது என்றும் கைது செய்யப்பட்ட பின்னர் ரவூப்பின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக அளித்தே இதற்குச் சான்றாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உமர் காலித்திற்குள் ‘தீவிரவாதியை’ தேடுகிறார்கள் – தாரப் ஃபரூக்கி

“இது, அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம்  மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாக சங்க்பரிவாரை எதிர்க்கும் தலைவர்களையும் இயக்கங்களையும் அச்சுறுத்துவதற்கான பாஜகவின் நடவடிக்கையாகும்.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேசிய பொதுச்செயலாளர் ரவூப் ஷரீபை உடனடியாக விடுவிக்குமாறு கேம்பஸ் ஃப்ரண்டின் தமிழ் மாநிலக் குழு கோரிக்கை வைத்துள்ளது.

நீ தீவிரவாதியா என்று மட்டுமே கேட்டனர்

மேலும், இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம்  மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை வகித்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை குறிவைப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்றும் வெறுப்பு அரசியலுக்கு எதிரான தங்கள் போராட்டத்திலிருந்து மாணவர்கள் பின்வாங்குவார்கள் என்பது ஆர்.எஸ்.எஸ்-ன் பலவீனமான எண்ணமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

தேசியப் பொதுச் செயலாளரை கைது செய்த நடவடிக்கைக்கு எதிராக, வலுவான மக்கள் எதிர்ப்பு போராட்டம் உருவாக வேண்டும் என்றும் அதேபோல் மக்கள் அனைவரும் பாசிச சங்கப்பரிவார கூட்டங்களுக்கு எதிராக கேம்பஸ் ஃப்ரண்ட்டோடு ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும் என்றும் தமிழ் மாநில குழு வலியுறுத்தியுள்ளது.

சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் இயற்றிய அலமேடா கவுன்டி – அமெரிக்காவின் 7-வது நகர மன்றம்

இப்பத்திரிகையாளர் சந்திப்பில் போது மாநில பொதுச்செயலாளர் கா.அஷ்ரப், மாநில செயலாளர் எம்.எஸ். முஹம்மது, மாநில மக்கள் தொடர்பு மற்றும் ஊடக ஒருங்கிணைப்பாளர் ஐ.கஸ்ஸாலி மீரான், சென்னை மாவட்ட தலைவர் ஜெ. முஹம்மது அக்பர் அலி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்