Aran Sei

’’மோடிதான் எங்களுக்கு சூப்பர் ஸ்டார்’ – பொன்.ராதாகிருஷ்ணன்

ஜினிகாந்தின் முடிவு மிகப்பெரிய ஏமாற்றம் அளித்தாலும் ஏற்றுக்கொள்கிறோம் என்றும் அவர் அரசியலுக்கு வந்தால் அரசியல் வாழ்க்கை பாதிக்கப்படும் என நினைத்தவர்கள்தான் மகிழ்ச்சியடைவார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவதற்காக, ஜனவரி மாதம் கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், “கட்சி தொடங்கவில்லை; அரசியலுக்கு வரமுடியவில்லை, மன்னியுங்கள்!” என்று இன்று (டிசம்பர் 29) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“அரசியலுக்க வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்” – ரஜினி மீண்டும் பல்டி

இது குறித்து, தனியார் தொலைக்காட்சிக்கு பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “ரஜினியின் அறிக்கை ஒட்டுமொத்த மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தாலும்கூட, அதை ஏற்றுக்கொள்கிறோம். ரஜினி அரசியலுக்கு வந்தால் தங்கள் அரசியல் வாழ்க்கை பாழாகிவிடும் என்று எந்த அரசியல் கட்சியினர் எதிர்பார்த்தார்களோ, அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

ரஜினி தேர்தல் அறிக்கை : 90ஸ் கிட்ஸ் முதல் ரிடயர்ட் நடிகர்கள் வரை-யார் யாருக்கு என்னென்ன

இதனால், பாஜகவுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்று கூறியுள்ள பொன்.ராதாகிருஷ்ணன் “இன்று உலக சூப்பர் ஸ்டாராக இருக்கக்கூடிய எங்கள் அரசியல் சூப்பர் ஸ்டார் பிரதமர் மோடிதான், பாரதிய ஜனதா கட்சியின் சூப்பர் ஸ்டார். அவரது பெயருக்கும், புகழுக்கும் யாரையும் இணை சொல்ல முடியாது. அதே நேரத்தில் தமிழகத்தில் இருக்கக்கூடிய சூழ்நிலையில், நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். இதை திமுக, அதிமுக என்று அனைத்துக் கட்சியினரும் விரும்புவார்கள்.” என்று கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் : விளக்கம் தருவாயோ வதந்தியே?

எங்கள் கொள்கையைப் பரப்ப வாருங்கள் என்று ரஜினியை பாஜக அழைத்தது கிடையாது என்று கூறியுள்ள பொன்.ராதாகிருஷ்ணன்  “இது தொடர்பாக எந்த அழுத்தத்தையும் அவருக்குக் கொடுத்தது கிடையாது. கொடுக்கவேண்டிய தேவையும் இல்லை.” என்றும் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்