Aran Sei

`தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கேட்போம்’ – பாஜக

ஒரு சூழ்நிலை ஏற்படுமாயின் ஆட்சியில் நாங்களும் பங்குபெறுவதில் என்ன தவறு இருக்க முடியும் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி  அரண்செய் -க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியில் பங்கு கேட்போம் என்கிற சிக்னல் பாமக தரப்பில் இருந்து வருகிறது. பாஜகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும். ஆட்சியில் உங்களுடைய பங்கை நீங்கள் கேட்பீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு “கடந்த தேர்தலில் அதிகமுக தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக் கூட்டணியில் இப்போதும் நிற்போம் என்பதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இல்லை. இப்போது நாங்கள் ஆட்சியமைக்கவேண்டும் என்று உறுதியாக நினைக்கிறோம். இந்தச் சிந்தனை எங்கள் பிஜேபிக்கு மட்டுமல்ல; அரசியல் கட்சி வைத்திருக்கும் எல்லோரும் ஆட்சியில் அமரவேண்டும் என்பதுதான் சாதாரண எண்ணமாகவும் இருக்கமுடியும். ஒருவேளை திமுகவில் இவ்வாறு யாரும் சொல்லவில்லையே என்று சொன்னால் அவர்கள் தங்கள் கட்சிகளுக்கு அவ்வளவு வலு இல்லை, பலம் இழந்து இருக்கிறோம் என்றுகூட அவர்கள் நினைக்கலாம். அது காங்கிரஸ், கன்யூனிஸ்ட், வைகோ உட்பட திமுக கூட்டணில் உள்ள யாராக இருந்தாலும் சரி” என்று கூறியுள்ளார்.

“இன்னைக்கு எங்களின் பலத்தைப் பெருக்குவதற்கும் மேலும் பலம் பெருகுவதற்கும் இப்படிதான் நான் சொல்வேன். ஒரு சூழ்நிலை ஏற்படுமாயின் ஆட்சியில் நாங்களும் பங்குபெறுவதில் என்ன தவறு இருக்க முடியும். இப்படி நினைப்பதோ சொல்வதோ ஒன்றும் தவறில்லையே. எழுதப்படாத விதி ஒன்றும் இல்லையே. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெறாது என்று சட்டம் ஏதும் இருக்கிறாதா என்ன.? எனவே, அந்த மாதிரி சூழ்நிலை வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். வந்தால் நல்லது. நாங்கள் முப்பது நாப்பது இடத்தில் ஜெயிக்கலாம் என்று நினைத்தால் தவறா? தவறில்லையே!” என்று கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்