Aran Sei

’தமிழக முதல்வர் வேட்பாளரை தேர்தலுக்கு பின்பே அறிவிப்போம்’ – பாஜக மேலிடம்

மிழக முதல்வர் வேட்பாளர் யார் என்பது தேர்தலுக்குப் பிறகே முடிவு எடுக்கப்படும் என்று பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்

இன்று (டிசம்பர் 30) பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவியும் பாஜக தமிழக தலைவர் எல்.முருகனும் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளனர்.

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? – அமைச்சர்களிடையே நிலவும் கருத்து முரண்பாடு

இந்த சந்திப்பில் பேசப்பட்டது குறித்து, சி.டி.ரவி தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தமிழகத்தில் தேர்தல் வெற்றிக்கு பின், முதல்வர் வேட்பாளரை யார் என்பதை தேசிய ஜனநாயக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுதான் கூடி இறுதி முடிவை எடுக்கும்.”  என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? – குளறுபடிக்கு முற்று வைத்த கே.பி. முனுசாமி

முன்னதாக, எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே நீடிப்பார் என்று அக்கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.

சமீபத்தில், “பாஜக அகில இந்தியக் கட்சி என்பதால், அவர்களின் கொள்கைப்படி அகில இந்திய கட்சியின் தலைவர்தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்” என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ  கூறியிருந்தார்.

‘பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா?’ – பதிலளிக்க மறுத்த மத்திய அமைச்சர்

சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய  மாநிலங்களவை உறுப்பினர் கே.பி. முனுசாமி, “அதிமுக வின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்.” என்று உறுதிப்படுத்தியிருந்தார்.

அதேநேரம், டிசம்பர் 25 ஆன் தேதி, செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமியா என்ற  கேள்விக்கு பதிலளிக்க மறுத்திருந்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்