Aran Sei

பீகார் தேர்தல் – ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

பீகார் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு முறைக்கேடுகள் நடந்துள்ளதாக எதிர் கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில் தேர்தல் ஆணையமும் பீகார் மாநில ஆளுநரும் சட்டப்படியான கடமைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மூன்று கட்டங்களாக நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் நித்திஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிக்குத் தேவையான இடங்களைத் தக்கவைத்துள்ளது. நித்திஷ் குமார் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

பீகார் தேர்தல் – முதல்வர் நிதீஷ் குமார் மீது வெங்காயம் வீசி தாக்குதல்

 

இந்நிலையில் ராஷ்டிரிய ஜனதாதளம் தலைமையிலான கூட்டணி 119 இடங்களில் வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் முதலில் உறுதிப்படுத்திவிட்டு பின்னர் மாற்றி அறிவித்தது என்று பட்டியலோடு விவரங்களை வெளியிட்டு அக்கூட்டணியினர் தேர்தல் ஆணையத்திடம் முறைப்படி புகார் அளித்துள்ளனர்.

பல இடங்களில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தபால் வாக்குகளை நீக்கிவிட்டு பாஜக கூட்டணி வெற்றி பெற்றதாகப் பல தொகுதிகளில் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளாதாக எதிர் காட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.

“எதிர் கட்சிகளின் புகார்கள் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையைத் தகர்ப்பதாக இருக்கிறதென்றும் புகார் கூறப்பட்ட தொகுதிகளில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும்வரை யாரையும் பதவி ஏற்க அனுமதிக்கக் கூடாது என்றும் ஆளுநரை வலியுறுத்துவதாக” திருமாவளவன்  கூறியுள்ளார்.

அதை மீறி ஆளுநர் செயல்பட்டால் அது ஜனநாயகப் படுகொலையாகவே இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுவதாகவும் தேர்தல் முடிவின் படியேகூட ராஷ்ட்ரிய ஜனதா தளம் தான் தனிப்பெரும் கட்சியாக உள்ளதால் ஆளுநர் முதலில் அக்கட்சிக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு அளிக்கவேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

அவர்களால் ஆட்சி அமைக்க முடியாது என்கிற போதுதான் அதற்கு அடுத்த பெரிய கட்சியாக இருக்கின்ற பாஜகவுக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என்று அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

பீகாரில் முடிவுக்கு வரும் சமூக நீதி அரசியல் – அதன் புதிய குரல் என்னவாக இருக்கும்?

 

“தேர்தல் நேரத்தில் ஆட்சியில் இருப்பவர்களின் அதிகாரம் செல்லுபடியாகாத விதத்தில் முடக்கிவைக்க சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்” எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெள்யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்