Aran Sei

பாரத் பந்த் : கடலில் இறங்கி போராட்டம் செய்த மீனவர்கள்

விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பாம்பன் மீனவர்கள் கடலில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களை எதிர்த்து தில்லியில் கடந்த இரண்டு வாரங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக, விவசாயச் சங்கங்கள் இன்று (டிசம்பர் 8) பாரத் பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

‘பிடுங்கப்பட்ட தீவுகளை மீனவப் பழங்குடிகளிடம் திருப்பிக் கொடுங்கள்’ – ஜோ டி குரூஸ்

இதைத் தொடர்ந்து, இன்று (டிசம்பர் 8) தமிழகம் முழுவதும், திமுக, கம்யூனிஸ்ட்கள், விசிக, எஸ்டிபிஐ போன்ற கட்சிகளும், வர்த்தகச் சங்கங்களும் இந்த அழைப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 8) காலை 9.30 மணிக்கு, இராமநாதபுரம் பாம்பன் வடக்குக் கடற்கரையில், விவசாயிகளிக்கு ஆதரவாக மீனவர்கள் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

`மத்திய அரசு துரோகத்தை நிறுத்த வேண்டும்’ – தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கம்

மீனவர்கள் படகில் கறுப்புக்கொடி கட்டியும் கையில் கறுப்புக்கொடி ஏந்தியும் கடலில் இறங்கி விவசாயிகள் போரட்டத்துக்கு ஆதரவாகவும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய மற்றும் மீன்பிடிச் சட்டங்களுக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பியுள்ளனர்.

இதில் பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி, மாவட்ட நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் ராயப்பன், மீனவ மக்கள் கட்சியைச் சேர்ந்த ராஜன், டான் மற்றும் 50 க்கும் மேற்பட்ட மீனவர்களும் பெண்களும் கலந்துகொண்டுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்