Aran Sei

’கொரோனா வருவதற்கு சாத்தியமுள்ள வேலைகளில் ஈடுபட வேண்டாம்’ – ரஜினிக்கு அப்போலோ அறிவுறுத்தல்

த்த அழுத்த பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்தை, சில அறிவுறுத்தல்களுடன் டிஸ்சார்ஜ் செய்வதாக அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கும் வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது : டிஸ்சார்ஜ் செய்வது குறித்து மாலை முடிவெடுக்கப்படும்

இது குறித்து, ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “டிசம்பர் 25 ஆம் தேதி, உயர் ரத்த அழுத்தம், உடல் சோர்வு காரணமாக ரஜினிகாந்த்,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் குழு அவரைத் தீவிரமாகக் கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தது.” என்று தெரிவித்துள்ளது.

மேலும், “தற்போது அவரது ரத்த அழுத்தம் சீரான நிலையில் உள்ளது. நன்றாக உடல்நலம் தேறிவருகிறார். அவரது உடல்நலனில் நல்ல முன்னேற்றம் இருந்ததால் இன்று (டிசம்பர் 27) மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.” என்று கூறியுள்ளது.

ரஜினி தேர்தல் அறிக்கை : 90ஸ் கிட்ஸ் முதல் ரிடயர்ட் நடிகர்கள் வரை-யார் யாருக்கு என்னென்ன

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் அவரது வயதை மனதில் வைத்து, மருந்து, உணவுக் கட்டுப்பாடுகள் மட்டுமின்றி, 1 வாரத்துக்கு முழு ஓய்வும் அடிக்கடி ரத்த அழுத்த அளவு பார்க்கப்பட வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், “குறைந்தபட்ச உடல் ரீதியிலான வேலைகளை செய்யக்கூடாது. மன அழுத்தமும் கூடாது. இவற்றோடு சேர்த்து கொரோனா தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் இருக்கும் வேலைகளில் அவர் ஈடுபட வேண்டாம்.” என்று அறிவுறுத்தியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்