Aran Sei

சன் டிவியில் அதிமுக பிரச்சார விளம்பரம் – திமுகவிற்குள் எழும் சலசலப்பு

டுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள சூழலில், அதிமுக கட்சியின் விளம்பரங்கள் சன் குழும தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பப்படுவதை திமுகவைச் சேர்ந்த தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செந்தில்குமார் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து, இன்று (டிசம்பர் 31) தனது ட்விட்டர் பக்கத்தில், சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான அதிமுக விளம்பரத்தின் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அந்த புகைப்படத்தில் முதலவர் எடப்பாடி பழனிசாமியின் படமும் ‘நல் ஆளுமையில் நம்பர் ஒன் மாநிலம்’ என்றும் எழுதப்பட்டிருந்தது. மேலும், சேற்றில் ஒரு கால், ஆற்றில் கால் என்ற பழமொழியை குறிப்பிட்டுள்ளார்.

‘திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்’ – உதயநிதி ஸ்டாலின் உறுதி

”சன் டிவி பெரிய வணிக சாம்ராஜ்யமாக இருக்கலாம். ஆனால் கலைஞரின் உடன்பிறப்புகள் மற்றும் நம் தளபதியின் லட்சக்கணக்கான அடிமட்ட தொண்டன் இவற்றை லேசாக எடுத்துக் கொள்வதில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுக விளம்பரங்களைச் சுமந்து பணம் சம்பாதியுங்கள் அல்லது திமுக தொண்டனுக்கு விசுவாசமாக இருங்கள் என்றும் கூறியுள்ளார்.

அந்த ட்வீட்டை பகிர்ந்த அரசியல் விமர்சகம் சுமந்த் ராமன், “தெளிவாக, திமுக-வின் உத்தரவு இல்லாமல், இப்படி இவரால் (எஸ்.செந்தில்குமார்) செய்ய முடியாது. என்ன நடக்கிறது இங்கு.” என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் – நடவடிக்கை எடுக்க திமுக மனு

அதற்கு பதிலளிக்கும் வகையில், ட்வீட் செய்துள்ள எஸ்.செந்தில்குமார், “இது முற்றிலும் தவறு டாக்டர். என் மனதைப் பேசவும், விசுவாசமான திமுக தொண்டனின் லட்சக்கணக்கானோரின் உணர்வுகளுக்கு குரல் கொடுக்கவும் எனக்கு மனசாட்சி இருக்க வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ”திமுக ஒரு ஜனநாயகக் கட்சி மற்றும் கருத்தை வெளிப்படுத்தும் இடமாக எப்போதும் இருக்கும். பொதுவான குரல் எப்போதும் மதிக்கப்படும்.” என்று செந்தில்குமார் குறிப்பிட்டுள்ளார்.

“அதிமுக அரசுக்குத் தலித் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” – திருமாவளவன்

இவரைத் தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக தென்மண்டல முன்னாள் அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரியும் தன் முகநூல் பக்கத்தில் அதிமுக விளம்பரத்தின் புகைப்படத்தை மட்டும் பகிர்ந்துள்ளார். அதில், இரண்டு கேள்விக்குறியை மட்டும் இட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்