Aran Sei

அதிமுக – அமமுக இணைப்பு வாய்ப்பே இல்லை – அமைச்சர் ஜெயக்குமார்

திமுகவை யாராலும் அசைத்துக்கூடப் பார்க்க முடியாது. இது மாபெரும் எஃகு கோட்டை. சசிகலாவுக்கு அதிமுகவில் இடமளிக்க வாய்ப்பே இல்லை என்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கடந்த ஜன.27-ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடித்து விடுதலையாகியுள்ளார். அவர் தற்போது கொரோனா பாதிப்புக்கு உள்ளாதனால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் விரைவில் வீடுதிரும்புவார் மருத்துவமனை  தெரிவித்துள்ளது.

‘வடஇந்தியாவின் “ஜெய் ஸ்ரீராம்” மேற்கு வங்கத்தின் முழக்கமல்ல. ஜெய் வங்காளமே எங்களுடையது’ – திரிணாமூல் காங்கிரஸ்

முன்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சசிகலாவை அதிமுகவில் சேர்க்கமாட்டோம். அதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தனர்.  இருந்தாலும், அதிமுக -அமமுக இணைப்பு, சசிகலா அதிமுகவில் இணைவது குறித்த பேச்சுகள் தொடர்கின்றன. இதனிடையே, ”சசிகலா விரைவில் குணமடைந்து அறப்பணியில் ஈடுபட்டு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும்” என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சசிகலா தலைமையில் அதிமுக மீட்டெடுக்கப்படும். இதை யாராலும் தடுக்க முடியாது என்று அமமுகவின் நமது எம்ஜிஆர் நாளிதழில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கான இடஒதுக்கீடு மறுப்பு – அண்ணா பல்கலையில்., எம்.டெக் மாணவர் சேர்க்கை நிறுத்தம்

இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், ”யாராலும் அதிமுகவைக் கிஞ்சித்தும் அசைத்துக்கூடப் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட மாபெரும் எஃகு கோட்டை இது. சசிகலாவுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களும் அதிமுகவில் இடம் இல்லை என்று ஏற்கெனவே தெளிவான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாகரீகம் கருதி அமைதியாக இருக்கிறோம்” மேலும், “ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேர் விடுதலைத் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து ஆளுநரை வலியுறுத்தி வருகிறோம்”  என்று தெரிவித்துள்ளார்.

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு 100 விழுக்காடு வாய்ப்பு இல்லை என்று டெல்லியில் முதல்வர் பேசும்போது தெளிவுபடுத்தியுள்ளார். இதுவே எங்கள் நிலைப்பாடு என்றும் அவர் கூறியுள்ளார்.

நமது எம்ஜிஆர் நாளிதழில் ஆயிரம் எழுதுவார்கள்.அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் தெரிவித்துவிட்டோம்” என்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்