Aran Sei

’எங்கள் தோளில் ஏறி பயணிக்கும் தேசியக் கட்சிகளெல்லாம் ஒரு பொருட்டே இல்லை’ – கே.பி.முனுசாமி

தேசியக் கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை என்றும் அவை அதிமுக, திமுக தோளில்தான் ஏறி பயணிக்கின்றன என்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

நேற்று (ஜனவரி 9) அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கலந்துக்கொண்டு பேசியுள்ளார்.

அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? – குளறுபடிக்கு முற்று வைத்த கே.பி. முனுசாமி

அப்போது, “தமிழகத்தை பொருத்தவரை தேசியக் கட்சிகள் ஒருபொருட்டே அல்ல. அவை அதிமுக மற்றும் திமுகவின் தோளில்தான் ஏறி பயணிக்கின்றன. வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவுக்கும், திமுகவுக்கும்தான் நேரடி மோதல் நடக்கவுள்ளது. வீர விளையாட்டு களத்தில் அடிபட்டுவிடும் என்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் தான் தேசிய கட்சிகள். எனவே, நமக்கு ஒரே எதிரி திமுகதான்.” என்று தெரிவித்துள்ளார்.

தர்மயுத்தம் 2.0 – களை கட்டும் அதிமுக

சசிகலாவின் விடுதலையை பற்றி கூறும் போது, “சசிகலா வந்தால் கட்சி 4 ஆக உடையும் என்கிறார்கள். ஸ்லீப்பர் செல் இருப்பதாக கூறுகின்றனர். அதிமுகவில் ஸ்லீப்பர் செல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் ஆட்சியையும், கட்சியையும் சிறப்பாகநடத்திச் செல்கின்றனர். ” என்று கூறியுள்ளார்.

மேலும், “சசிகலாவெளியில் வந்தாலும் ஒன்றும்ஆகப்போவதில்லை. யாரும்அங்கு செல்லப்போவதில்லை.” என்றும் நமக்குள் குழப்பம் ஏற்படுத்தபலர் முயற்சிக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

’பாஜகவுடன் அதிமுக கூட்டணியை அறிவித்த நாளே, எங்கள் வெற்றி உறுதியாகி விட்டது’ – ப.சிதம்பரம்

“வரும் 3 மாதங்களும் ஒவ்வொரு நிமிடமும் நாம் ஒரே முகமாக, ஒரே சிந்தனையாக இருக்க வேண்டும். இடையில் வருவோர் இடையில் போகட்டும். முதல்வர் பழனிசாமியே 2-வது முறையாக 2021-ஆம் ஆண்டிலும் முதல்வர் பொறுப்பேற்பார். ஓபிஎஸ் ராஜகுருவாக நின்று அவரை ஏற்றி வைப்பார்.” என்று தெரிவித்துள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்