Aran Sei

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரி திமுகவினர் போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மற்றும் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தக்கோரி மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தபட்டது.

காலை பத்து மணிக்கு திமுகாவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தக்கோரியும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் தங்கள் இல்லம் முன்பு கருப்பு கொடிகளுடன் போராட்டம் நடத்தினர்.

சென்னையில், போராட்டத்துக்கு பிறகு செய்தியாளரை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தக்கோரியும் மிகப்பெரியளவில் போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்ததோம். அனுமதி கிடைக்காததினால் முதல் கட்டமாக தலைவரின் (மு.க.ஸ்டாலின்) ஆலோசனையைப் பெற்று அறவழி போராட்டத்தை தமிழகம் முழுவதிலும் நடத்தியிருக்கின்றோம் என்று கூறினார்.

“நீட் தேர்வினால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருகின்ற நிலையில்,  நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்” என்று உதயநிதி கூறினார்.

ஆன்லைன் வகுப்பு குறித்து பேசுகையில் “ஆன்லைன் வகுப்பு புரியவில்லை என்று ஒரு மாணவரும் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள ஸ்மார்ட் போன் இல்லாத காரணத்தினால் மற்றொரு மாணவரும் தற்கொலை செய்துள்ளனர் என்று கூறிய உதயநிதி ஆன்லைன் வகுப்புகளை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பலாம் என்று தெரிவித்தார்.

“கொரோனா காலத்தில் மக்கள் கையில் பணம் இல்லாத நிலையை கணக்கில் கொண்டு, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவர்களிடமிருந்து கட்டணங்களை வசூல் செய்வதை முறைப்படுத்த வேண்டும் என்றும்” உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்