Aran Sei

மவுனத்தைக் கலைத்த ஒரு குடும்பம்: சோராபுதீன் வழக்கை விசாரணை செய்த நீதிபதியின் மரணத்திலிருக்கும் அதிர்ச்சி தரும் தகவல்கள்

2014, டிசம்பர் ஒன்றாம் நாள் காலை மும்பையில் உள்ள மத்திய புலனாய்வுப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தின் தலைவராக இருந்த 48 வயதான பிரஜ்கோபால் ஹரிகிஷன் லோயா  நாக்பூரில் சக ஊழியரின் மகள் திருமணத்திற்கு சென்றிருந்த போது இறந்துவிட்டதாக அவருடைய  குடும்பத்திற்கு தெரிவிக்கப்பட்டது. நீதிபதி லோயா 2005 ம் ஆண்டு என்கவுன்டரில் கொலை செய்யப்பட்ட சோராபுதீன் ஷேக்கின் கொலை குறித்து நாட்டின் மிக உயர்மட்டத்தினர் தொடர்புள்ள முக்கியமான வழக்கை விசாரித்து வந்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர் அமித்ஷா. சோராபுதீன் கொல்லப்பட்ட போது அமித்ஷா குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சர். லோயா இறக்கும் போது அவர் பாஜகவின் தேசியத் தலைவர். நீதிபதி மாரடைப்பால் இறந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

லோயா இறந்த பிறகு அவரது குடும்பத்தினர் ஊடகங்களுடன் பேசவில்லை. ஆனால் 2016 ல் லோயாவின் மருமகள் நுபுர் பாலபிரசாத் பியானி, நான் புனே சென்றிருந்த போது என்னை அணுகினார். அவளுடைய மாமாவின் மரணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து அவர் கவலையுடனிருந்தார். இதனைத் தொடர்ந்து, 2016 நவம்பருக்கும் 2017 நவம்பருக்கும் இடையில் பல சந்திப்புகள் நடந்தன. நான் லோயாவின் சகோதரியும், பியானியின் தாயாரும், அரசு மருத்துவருமான அனுராதா பியானியுடனும், லோயாவின் மற்றொரு சகோதரியான சரிதா மந்தானேவுடனும், லோயாவின் தந்தை ஹர்கிஷனுடனும் பேசினேன்.  நீதிபதியின் மரணத்திற்குப் பிறகு உடற்கூறாய்வு உள்ளிட்ட   நடைமுறைகளை மேற்கொண்ட அரசு ஊழியர்களையும் கண்டுபிடித்துப் பேசினேன்.

ஒமர் அப்துல்லாவின் அனல் பறக்கும் பேச்சு – பதில் சொல்ல முடியாமல் திணறிய நவிகா குமார்

இவற்றிலிருந்து கிடைத்த தகவல்கள், லோயாவின் மரணம் குறித்த ஆழமான கவலை தரும் கேள்விகளை எழுப்பின. அவற்றில் மரணம் குறித்த அறிவித்தல்களில் ஒரு ஒத்திசைவு இல்லாதது, மரணத்திற்குப் பிறகு மேற்கொண்ட நடைமுறைகள் மற்றும் அவரது உடலை அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைத்த போது அந்த உடல் இருந்த நிலை ஆகியவை குறித்த கேள்விகளும் அடங்கும். அவரது குடும்பத்தினர் லோயாவின் மரணம் குறித்து ஒரு விசாரணைக் குழுவின் விசாரணையை கோரிய போதும், அப்படி எதுவும் நடக்கவே இல்லை.

2014, நவம்பர் 30 ம் தேதி இரவு 11:00 மணிக்கு லோயா தன் மனைவி சர்மிளாவுடன் தனது கைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். ஏறத்தாழ 40 நிமிடம் அவர் தமது அன்றைய நாள் முழுவதற்குமான கடுமையான வேலை அட்டவணை குறித்து விளக்கியுள்ளார். தனது சக நீதிபதி ஒருவரின் மகளான சப்னா ஜோஷி என்பவரின்  திருமணத்திற்காக லோயா நாக்பூர் சென்றிருந்தார். முதலில் அதற்குச் செல்ல லோயா விருப்பமாக இல்லை. தன்னுடன் பணியாற்றும் இரு நீதிபதிகள் கேட்டுக் கொண்டதால் அவர்களுடன் செல்ல ஒப்புக் கொண்டார். லோயா தன் மனைவியிடம் தான் திருமணத்திலும்,  அதன்பிறகு நடந்த வரவேற்பு விழாவிலும் கலந்து கொண்டதாகக் கூறியுள்ளார். அவரது தனது மகன் அனுஜ் குறித்தும் அவரிடம் கேட்டுள்ளார். தான் அவருடன் நாக்பூருக்கு வந்த நீதிபதிகளுடன் நாக்பூர் சிவில் லைன் பகுதியில் உள்ள மிக முக்கிய நபர்கள் தங்கும் விருந்தினர் இல்லமான‌ ரவி பவனில் தங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஹைதியர்கள் அமெரிக்கர்கள் அல்ல – ஹைதியின் எதிர்காலத்தை ஹைதியர்களே தீர்மானிக்க வேண்டும்

இதுதான் லோயாவின்  கடைசி அழைப்பு எனவும், கடைசி உரையாடல் எனவும்  தெரிகிறது. மறுநாள் அதிகாலையில் அவரது மரணம் குறித்த செய்தியை அவரது குடும்பத்தினர் பெற்றனர். “2014, டிசம்பர் முதல் நாள் அதிகாலையில் மும்பையில் இருந்த அவரது மனைவியும், லாத்தூரில் இருந்த நானும், துலே, ஜல்கோயன், அவுரங்காபாத் ஆகிய ஊர்களில் இருந்த அவரது மகள்களும் தொலை பேசி அழைப்புகளைப் பெற்றனர்,” என நான் நவம்பர் 2016 ல் முதன்முதலில் சந்தித்த போது  தனது சொந்த ஊரான லாட்டூர் நகருக்கு அருகில் உள்ள கேட்கோயனில் இருந்த அவரது தந்தை ஹர்கிஷன் கூறினார். ” பிரிஜ் இரவே இறந்து விட்டதாகவும், உடற்கூறாய்வு முடிக்கப்பட்டு உடல் சொந்த ஊரான கேட்கோயனுக்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும்” அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். “நான் நில அதிர்வு ஏற்பட்டு என் வாழ்க்கையையே சிதைந்து விட்டது போல் உணர்ந்தேன்.” என்றார் அவர்.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

லோயா மாரடைப்பால் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது. “அவருக்கு நெஞ்சுவலி இருந்ததாகவும், . அதனால் அவர் நாக்பூரில் உள்ள தாந்தே தனியார் மருத்துவமனைக்கு தானியில் கொண்டு செல்லப்பட்டார் என்றும், அங்கு அவருக்கு சில மருத்துவம் செய்யப்பட்டதாகவும் எங்களிடம் சொல்லப்பட்டது,” என்கிறார் ஹர்கிஷன். லோயாவின் சகோதரி பியானி தாந்தே மருத்துவமனை பலராலும் அறியப்பட்டிராத சாதாரண மருத்துவமனைதான்” என்றும், அவர் பின்னர் அங்கு இதய மின் துடிப்பு வரைவி எனப்படும் இசிஜி கருவி பழுதடைந்திருந்ததை அறிந்ததாகவும் கூறுகிறார். பிறகு அவர் மற்றொரு தனியார் மருத்துவமனையான ” மெடிட்ரீனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும்,”  “அங்கு அவர் வரும்போதே இறந்துவிட்டதாகக் அறிவித்தனர்” என்கிறார் ஹர்கிஷன்.

சோராபுதீன் வழக்கு ஒன்றைத்தான் லோயா தான் இறப்பதற்கு முன் விசாரணை செய்துக் கொண்டிருந்தார். அந்த வழக்கு  2012 ம் ஆண்டு நாட்டில் நடந்துக் கொண்டிருந்த வழக்குகளில் அனைவராலும் கவனிக்கப்பட்ட  முக்கிய வழக்காக இருந்தது. “விசாரணையின் ஒருங்கிணைப்பை பாதுகாக்க மாநிலத்திற்கு வெளியே விசாரணையை மாற்றுவதே நல்லது என்பதில் தங்களுக்கு உடன்பாடு இருப்பதாகக் கூறி  வழக்கை குஜராத்திலிருந்து மகாராட்டிரத்திற்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் அந்த வழக்கை ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே நீதிபதி விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை மீறி,  இந்த வழக்கை முதலில் விசாரணை செய்து வந்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற  நீதிபதி ஜெடி உத்பட்டை 2014 நடுவில் மாற்றி  அவருக்குப் பதிலாக லோயாவை நியமித்தது அரசு.

நீதிபதி உத்பட், 2014, ஜூன் 6 ம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேரில் வருவதற்கு விலக்குக் கோரிய அமித் ஷாவை கண்டித்திருந்தார்.  ஜூன் 20 ம் தேதியை அடுத்த விசாரணைக்கும் அமித்ஷா வரவில்லை. அதனால் வழக்கை 26ம் தேதிக்கு ஒத்திவைத்தார் உத்பட். ஆனால் அவர் ஜூன் 25 ம் தேதி மாற்றப்பட்டார். 2014, அக்டோபர் 31 ல் அமர்வில் அமித்ஷா விசாரணைக்கு நேரில் வருவதிலிருந்து விலக்களித்த நீதிபதி லோயா, மும்பையில் இருந்த போதும் ஏன் ஜூன் 20 விசாரணைக்கு வரவில்லை எனக் கேட்டார். அடுத்த விசாரணையை டிசம்பர் 15 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

பெகசிஸ்: பேரழிவு விளைவுகளை தடுக்க அரசியல் நடவடிக்கைகளால் மட்டுமே முடியும் – எழுத்தாளர் அருந்ததிராய்

டிசம்பர் ஒன்றாம் தேதி நடந்த லோயாவின் மரணம் ஒரு சில பத்திரிகைகளில் மட்டுமே வெளியானது. அது குறிப்பிடத்தக்க அளவில்  ஊடக கவனத்தை பெறவில்லை. தி இண்டியன் எக்ஸ்பிரஸ், ” மாரடைப்பால் இறந்தார்” என்று கூறி விட்டு, ” லோயாவுக்கு நெருக்கமானவர்கள் அவர் நல்ல உடல்நிலையுடன் இருந்ததாகக் கூறியதாகவும்” குறிப்பிட்டிருந்தது. டிசம்பர் 3ம் தேதி திரிணாமூல் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, லோயாவின் மரணம் குறித்து விசாரணை வேண்டும் என நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு போராட்டம் நடத்தியதை அடுத்து ஊடக கவனம் சூடு பிடித்தது. அடுத்த நாள் சோராபுதீனின்  சகோதரர் ரூபாபுதீன் லோயாவின் மரணத்திற்கு அதிர்ச்சி தெரிவித்து சிபிஐக்கு ஒரு கடிதம் எழுதினார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் போராட்டத்தினாலோ அல்லது அந்தக் கடிதத்தாலோ எதுவும் நடக்கவில்லை.

லோயாவின் மரணத்தை சுற்றியிருந்த சூழ்நிலை பற்றிய எந்த ஒரு பின்தொடர்தலும்  நடைபெறவில்லை. லோயாவின் குடும்பத்தினருடன் நான் நடத்திய உரையாடல் மூலம், சோராபுதீன் வழக்கு விசாரணைக்கு தலைமை தாங்கி நடத்திய போதும், அவருடைய மரணத்திற்குப் பிறகு என்ன நடந்தது என்பது பற்றியும் துண்டு துண்டாக கிடைத்த செய்திகளை ஒன்று படுத்திய போது இரத்தத்தை உறைய வைக்கும் ஒரு விளக்கத்தை பெற்றேன். பியானி அவருடைய நாட்குறிப்பின் பிரதிகளை என்னிடம் கொடுத்தார். அதில் வழக்கு விசாரணைத் துவங்கியதிலிருந்து தனது சகோதரரின் மரணம் வரை நடந்தவை உள்ளிட்ட அன்றாட நிகழ்வுகளையும் முறையாக எழுதி பராமரித்து வந்திருந்தார். அவற்றில், தன்னை பாதித்த பல நிகழ்வுகளின் கூறுகளை குறித்து வைத்துள்ளார். நான் லோயாவின் மனைவி மற்றும் மகனைத் தொடர்பு கொள்ள முயன்ற போது அவர்கள் தங்கள் உயிருக்கு அஞ்சி பேச மறுத்து விட்டனர்.

டெல்லியில் தகர்க்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயமும் இந்தியக் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களும் – அ.மார்க்ஸ்

துலேவில் வசிக்கும் பியானி, 2014, டிசம்பர் ஒன்றாம் தேதி யாரோ ஒருவர் தன்னை போர்டே என்ற பெயர் கொண்ட நீதிபதி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, லோயாவின் உடலை அனுப்பியுள்ள கேட்கோயனுக்குச் செல்லுமாறு கூறினார். அவரே பியானிக்கும், பிற குடும்ப உறுப்பினர்களுக்கும் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டதாகவும், மரணத்திற்குக் காரணம் மாரடைப்பு என்றும் கூறினார்.

எப்போதும் இயல்பாக கேட்கோயனில் இருக்கும் லோயாவின் தந்தை, அப்போது லாட்டூரில் தனது ஒரு மகளின் வீட்டில் இருந்தார். அவருக்கும் கூட அவரது மகனின் உடல் கேட்கோயனுக்கு வரும் என்றே தொலைபேசியில் செய்தி வந்தது. “ஈஸ்வர் பெஹட்டி என்ற ஆர்எஸ்எஸ் ஊழியர் தான் உடலை கோட்கோயனுக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்வதாகக் கூறினார்,” என்கிறார் பியானி. ” பிரிஜ்லோயாவின் மரணம் பற்றி அவருக்கு யார் எப்போது, எப்படி கூறினார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.

அவுரங்காபாதில் தனிப்பயிற்சி மையத்தை நடத்தி வரும் லோயாவின் மற்றொரு மகளான சரிதா மந்தானே லாட்டூருக்கு வந்த போது தனக்கு போர்டேவிடமிருந்து காலை ஐந்து மணிக்கு லோயாவின் மரணம் பற்றிய தொலைபேசி செய்தி வந்ததாகக் குறிப்பிட்டார். “நாக்பூரில் பிரிஜ்  இறந்து விட்டதாகவும் உடனே நாக்பூருக்கு வருமாறும் அவர் கூறினார்,” என்கிறார் அவர். அவர் உடனே  லாட்டூரில்  ஒரு மருத்துவமனையில் சில நாட்களாகச் சிகிச்சைப் பெற்று வந்த தனது மருமகனை அழைத்துக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே வரும்போது, இந்த மனிதர் ஈஸ்வர் பெஹெட்டி அங்கு வந்தார். அவருக்கு நாங்கள் இந்த சாரதா மருத்துவமனையில் இருப்பது எப்படி தெரிந்தது என்று இன்று வரை என்னால் கண்டுபிடிக்க முடிவில்லை.” மந்தானேவின் கூற்றின்படி, பெஹெட்டி இரவு முழுவதும் நாக்பூரில் உள்ளவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாகவும், உடல் ஒரு மருத்துவ ஊர்தியில் கேட்கோயனுக்கு அனுப்பப்பட்டு விட்டதால் நாக்பூர் செல்வதில் பயனில்லை என்றும் கூறியுள்ளார். “அவர் எங்களை அவரது வீட்டிற்கு கூட்டிச் சென்று, தான் அனைத்தையும் ஒருங்கிணைப்பதாகவும் கூறினார்,” என்று அவர் தெரிவித்தார். (பெஹெட்டிக்கு நான் அனுப்பி கேள்விகளுக்கு இது வரை பதில் கிடைக்கவில்லை.) கேட்கோயனுக்கு பியானி வந்து சேர்ந்த போது, பிற சகோதரிகள் ஏற்கனவே தங்கள் மூதாதையரின் வீடிற்கு வந்திருந்தனர். அவரது நாட்குறிப்பின்படி, பியானி வந்து பிறகு காலை 11:30 மணிக்கு உடல் ஒப்படைக்கப்பட்டது. அந்தக் குடும்பத்தினர் அதிர்ச்சி அடையும் வகையில் லோயாவின் உடலுடன் அவரது சக ஊழியர்கள் யாரும் வரவில்லை.

‘இது நம்ம காலம்’ – ‘சார்பட்டா பரம்பரை’ பேசும் அரசியல் என்ன?

அந்த உடலுடன் வந்த ஒரே நபர் மருத்துவ ஊர்தி ஓட்டுநர் மட்டுமே. “இது அதிர்ச்சியாக இருந்தது. அவரை நாக்பூரில் நடந்த  திருமணத்திற்கு வரவேண்டும் என வற்புறுத்தி அழைத்துச் சென்ற இரண்டு நீதிபதிகள் அவரது உடலுடன் வரவில்லை. லோயாவின் மரணத்தையும், உடற்கூறாய்வு செய்யப்பட்டதையும் தெரிவித்த போர்டே உடலுடன் வரவில்லை. ஏன் அவர் உடலுடன் யாரும் வரவில்லை?” என்ற இந்தக் கேள்விக என்னைச் சுற்றி சுற்றி வருகின்றது. அவரது நாட்குறிப்பில் ஒன்று. அவர் சிபிஐ நீதிமன்ற நீதிபதி என்பதால் அவருக்கு பாதுகாப்புத் தரபாபட்டிருக்க வேண்டும். அவரது உடல்  முறைப்படி பாதுகாவலர்களுடன் வந்திருக்க வேண்டும்.

லோயாவின் மனைவி சர்மிளா மற்றும் அவரது குழந்தைகள் அபூர்வாவும், அனுஜ்ஜும் மும்பையிலிருந்து கேட்கோயனுக்கு சில நீதிபதிகளுடன் சேர்ந்து வந்தனர். பயணத்தின்போது அவர்களில் ஒருவர் அனுஜ் மற்றும் மற்றவர்களிடம் யாருடனும் எதுவும் பேச வேண்டாம் என்று கூறிக் கொண்டே வந்தார். அனுஜ் வருத்தத்துடனும் அச்சத்துடனும்தான் இருந்தார்‌. ஆனால் நிதானம் இழக்காமல் தன் தாய்க்கு ஆதரவாக இருந்தார்.

பியானி, லோயாவின் உடலைப் பார்த்த உடனேயே ஏதோ தவறு இருப்பதாக உணர்ந்ததாகக் கூறினார். “சட்டையின் பின்புறத்தில் கழுத்தில் இரத்தக் கறைகள் இருந்தன. அவரது கண் கண்ணாடி கழுத்துக்கு கீழே இருந்தது,” என்று அவர் கூறினார். மந்தானே லோயாவின் கண்கண்ணாடி “அவரது உடலுக்கு அடியில் சிக்கிக் கொண்டிருந்தது,” என்று கூறினார். அப்போது பியானி எழுதியுள்ள நாட்குறிப்பு: “அவரது கழுத்துப் பட்டையில் இரத்தக்கறை இருந்தது. அவரது பெல்ட் எதிர்பக்கம் திருப்பப்பட்டிருந்தது. அவரது கால்சட்டையின் கொக்கி உடைந்திருந்தது. எனது மாமாவும் கூட இதில் சந்தேகம் இருப்பதாக உணர்ந்தார்,” என்று ஹர்கிஷன் என்னிடம் கூறினார். ” ஆடையில் இரத்தக்கறைகள் இருந்தன.” மந்தானேவும்,” கழுத்தில் இரத்தம் இருந்தது. தலையில் இரத்தமும், காயமும் இருந்தது…. பின்புறமும் இரத்தம் இருந்தது. அவரது சட்டையில் இரத்தத் துளிகள் இருந்தன,” என்று கூறுகிறார்.

குடிகளின் நலன் காக்கும் அரசிற்கு மக்கள் தொகை பெருக்கம்: வரமா? சாபமா?

” அவரது சட்டையின் இடது தோளிலிருந்து இடுப்பு வரை இரத்தம் இருந்தது,” என்கிறார் ஹர்கிஷன். ஆனால் நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொடுத்த  உடற்கூறாய்வு அறிக்கையில் “தண்ணீராலோ, இரத்தத்தில் தோய்ந்து அல்லது வாந்தியாலோ அல்லது உடற்கழிவினாலோ ஈரமாக இருந்ததா என்று கூறும் உடைகளின் நிலை என்ற தலைப்பின் கீழ்- வெறும் ” உலர்ந்திருந்தது” என்று மட்டுமே கையால் எழுதப்பட்டிருந்தது.

உடலின் நிலையைப் பார்த்தவுடன் விமானிக்கு சந்தேகம் வரக் காரணம் ஒரு மருத்துவராக,”உடற்கூறாய்வின் போது இரத்தம் வெளியே வராது. ஏனெனில் அப்போது இதயமும் நுரையீரலும் வேலை செய்யாது,” என்று எனக்குத் தெரியும் என்று கூறும் அவர், இரண்டாவது உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என கோரினார். ஆனால் குழுமியிருந்த லோயாவின் நண்பர்களும், சக ஊழியர்களும் பிரச்சனையை மேலும் குழப்ப வேண்டாம் எனக் கூறி எங்களைத் தடுத்து விட்டனர். அந்தக் குடும்பம் உணர்ச்சிவசப்பட்டு, அச்சத்தில் இருந்தது.  “எங்களை வலுக்கட்டாயமாக இறுதிச் சடங்குகளை செய்ய வைத்தனர்,” என்கிறார் ஹர்கிஷன்.

தில்லி கலவரம்: வெற்றுத் தாளில் கையொப்பம் வாங்கிக் கொண்டு 16 மாதங்களாக சிறை வைக்கப்பட்ட இஸ்லாமியர்

லோயாவின் மரணம் ஐயத்திற்குரியது எனில் – உடற்கூறாய்விற்கு பரிந்துரைக்கப்பட்டது உண்மை எனில்-‘பஞ்ச்நாமா’ எனப்படும் நிகழ்விடத்திலிருந்து எடுக்கப்பட்டப் பொருட்களின் விவரங்கள் அடங்கிய ஆவணம் தயாரிக்கப்பட்டு, மருத்துவ- சட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். “சட்ட நடைமுறைகளின் படி, காவல்துறை இறந்தவரின் உடைமைகளை சேகரித்து, பட்டியலிட்டு, முத்திரையிட்டு அவற்றை இறந்தவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்,” என்கிறார் புனேவைச் சேர்ந்த ஆசிம் சரோட் எனும் வழக்கறிஞர். தங்கள் குடும்பத்தினரிடம் அத்தகைய ஆவணம் எதையும் தரவில்லை என பியானி கூறுகிறார்.

லோயாவின் கைப்பேசி அந்த குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை காவல்துறை தரவில்லை மாறாக பெஹெட்டித்தான் கொடுத்துள்ளார். “நாங்கள் அந்தக் கைப்பேசியை மூன்றாவது நாளோ நான்காவது நாளோதான் பெற்றோம்,” என்கிறார் பியானி. “நான் அதை உடனே தர வேண்டும் எனக் கேட்டேன். அதில் அவர் பேசிய அழைப்புகளின் தகவல்கள் மற்றும் நடந்தவை எல்லாம்  இருந்திருக்கும். எங்களுக்குக் கிடைத்திருந்தால் நாங்கள் அது பற்றி அறிந்திருப்போம். மேலும் குறுஞ்செய்திகள். இந்த நிகழ்வுக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் வந்திருந்த ஒரு குறுஞ்செய்தியில்,” ஐயா, இவர்களிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள்” என்ற செய்தி இருந்தது. பிற அனைத்துச் செய்திகளும் அதிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன,” என்று கூறுகிறார் பியானி.

லோயா இறந்த இரவு மற்றும் மறுநாள் நடந்த நிகழ்வுகள் குறித்து ஏராளமான கேள்விகளை எழுப்புகிறார் பியானி. அவற்றுள் தானி நிறுத்துமிடம் இரண்டு கி.மீ. தள்ளி இருக்கும் போது, லோயா ஏன் தானியில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்ற கேள்விகளும் அடங்கும். “ரவி பவனுக்கு அருகில் எந்த தானி நிறுத்துமிடமும் இல்லை. பகலில் கூட ரவி பவனுக்கு அருகில் எவருக்கும் தானி கிடைக்காது. அவருடன் வந்தவர்களுக்கு அந்த நடு இரவில் எப்படி தானி கிடைத்தது?” என வினவுகிறார் அவர். பிற வினாக்களும்கூட பதில் தரப்பட்டாமலே  கிடக்கின்றன. லோயாவை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது ஏன் அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்படவில்லை? அவர் இறந்த உடனே ஏன் அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை? ஏன் அவர்களிடம் உடற்கூறாய்வு செய்வதற்கு அனுமதி கேட்கப்படவில்லை? அல்லது அப்படி ஒன்று நடக்க இருப்பதை ஏன் அதற்கான ஏற்பாடுகள் துவங்கும்  முன்னரே தெரிவிக்கவில்லை? உடற்கூறாய்விற்கு யார் பரிந்துரை செய்தார்கள்? எதற்காக பரிந்துரை செய்தார்கள்? உடற்கூறாய்வு செய்ய பரிந்துரைப்பதற்கான காரணம் என்ன? தாந்தே மருத்துவமனையில் எத்தகைய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது?  அமைச்சர்கள், இந்திய ஆட்சிப் பணி மற்றும் இந்திய காவல்துறை பணி ஆகியவற்றைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்ட மிக முக்கிய விருந்தினர்கள் தங்கும் ரவி பவனில் லோயாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஒரு வாகனம் கூடவா இல்லை? டிசம்பர் 7ம் தேதி நாக்பூரில்   மகாராட்டிர சட்டப் பேரவைத் துவங்குவதால், அதற்கு முன்பே முன் தயாரிப்பிற்காக நூற்றுக்கணக்கான அதிகாரிகள் நகருக்கு வரத் துவங்கி இருப்பார்கள். நவம்பர் 30 மற்றும் டிசம்பர் ஒன்று ஆகிய நாட்களில் ரவி பவனில் தங்கி இருந்த முக்கிய விருந்தினர்கள் யார்? யார்? ” இவையெல்லாம் மிகவும் மதிப்பு வாய்ந்த கேள்விகள்,” என்கிறார் வழக்கறிஞர் சரோட். “தாந்தே மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவ சிகிச்சைக் குறித்த அறிக்கை லோயாவின் குடும்பத்தினருக்கு ஏன் தரப்படவில்லை? இந்த கேள்விகளுக்கான பதில்கள் யாருக்காவது பிரச்சனையை ஏற்படுத்துமா?” இது போன்ற கேள்விகள் ” அந்தக் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களை அனைவரையும் இன்னும் பாதித்து வருகிறது,” என்கிறார் பியானி.

பெருமையோடு திரியும் ஜாமியா துப்பாக்கிச் சூடு நடத்தியவன் – கவலையற்று இருக்கும் காவல்துறை

லோயாவை நாக்பூர் செல்ல வலியுறுத்திய நீதிபதிகள் லோயாவின் மரணத்திற்குப் பிறகு ஒன்று  அல்லது ஒன்றரை மாதங்கள் வரை லோயா குடும்பத்தினரை வந்து சந்திக்கவே இல்லை என்பது குழப்பத்தை மேலும்  அதிகாரிக்ககிறது என்கிறார் பியானி. அதற்குப் பிறகுதான் லோயாவின் இறுதி மணிநேரத்தில் நடந்ததைப் பற்றி அவர்கள் அறிந்தார்கள். அந்த இரண்டு நீதிபதிகளும்  இரவு12:30 மணிக்கு லோயாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், உடனே அவரை தானியில் ஏற்றி தாந்தே மருத்துவமனையில் சேர்த்ததாகவும், அங்கு அவர் தானே மாடிபடிக்கட்டுகளில் ஏறிச் சென்றதாகவும், அங்கு அவருக்கு சில சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாகவும், பிறகு அவர் மெடிட்ரினா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவர்  வரும்போதே உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது எனவும் கூறினர். இதற்குப் பிறகும் பல கேள்விகள் பதிலளிக்கப்படாமல் உள்ளன. ” நாங்கள் தாந்தே மருத்துவமனையில் நடத்திய மருத்துவ சிகிச்சைகள் பற்றி விவரங்களைக் பெற முயன்றோம். ஆனால் மருத்துவர்களும்,  பணியாளர்களும் எந்த விவரத்தையும் வெளியிட மறுத்து விட்டனர்,” என்கிறார் பியானி.

நான் நாக்பூர் அரசு மருத்துவமனையிலிருந்து உடற் கூராய்வு அறிக்கையைப் பெற்றேன். அதுவே தன்னளவில் பல கேள்விகளை எழுப்புகிறது. அந்த அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் சாதர் காவல் நிலைய ஆய்வாளர் கையெழுத்திட்டுள்ளார். அத்துடன் இறந்தவரின்   ‘மைதாச்சா சூளட்பாவ்(maiatacha Chulatbhau) அதாவது தந்தைவழி உறவினன்(paternal cousin brother) என்ற அடைமொழியுடன் யாரோ ஒருவர் கையெழுத்திட்டுள்ளார். அவர்தான் உடற்கூறாய்விற்குப் பின் உடலைப் பெற்றிருக்கிறார். ” எனக்கு சகோதரனோ தந்தைவழி உறவினரோ நாக்பூரில் இல்லை,” என்கிறார் லோயாவின் தந்தை. அந்த அறிக்கையில் கையெழுத்திட்டது யார் என்பது பதிலளிக்கப்படாத அடுத்தக் கேள்வி.

பசுஞ்சாணமும் கொரோனாவும்; மோடி அரசின் அறிவியல் ஆலோசனைகள் – சத்யசாகர்

மேலும் அந்த அறிக்கை, உடல் மெடிட்ரினா மருத்துவமனையிலிருந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாக்பூர், சிதாபார்தி காவல்நிலையத்தால் அனுப்பப்பட்டதாகக் கூறுகிறது. அந்த காவல் நிலையத்தைச் சேர்ந்த பங்கஜ் என்ற காவலர் உடலைக் கொண்டு வந்ததாகவும் அவரது அடையாள வில்லை எண் 6238 என்றும் குறிப்பிடுகிறது. உடல், 2014,  டிசம்பர் 1ம் தேதி, காலை  10:50 மணிக்கு வந்ததாகவும், உடற்கூராய்வு 10:55 க்கு தொடங்கியதாகவும், அது 11:55 மணிக்கு முடிந்து விட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை, காவல் துறையின் தகவல் படி,  லோயா காலை” 0400 மணியிலிருந்து நெஞ்சுவலி யால்” சிரமப்பட்டதாகவும், 1/12/14 காலை 6:15″  மணிக்கு இறந்து விட்டதாகவும்  கூறுகிறது. அதில் முதலில் தாந்தே மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாகவும், பின்னர் மெடிட்ரினா மருத்துவமனைக்கு  இறந்த நிலையிலேயே கொண்டு வரப்பட்டதாகவும்” கூறுகிறது.

அறிக்கையில் இறந்ததாகக் கூறப்படும் நேரமான காலை 6:15 என்பது முரண்பாடாகத் தோன்றுகிறது. ஏனெனில் லோயாவின் குடும்ப உறுப்பினர்கள் கூற்றுப்படி, அவர்கள் அதிகாலை 5:00 மணியிலிருந்தே அவரது மரணம் குறித்த செய்திகளை கைப்பேசி மூலம் பெற்று வந்தனர். மேற்கொண்டு நான் நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சிதாபார்தி காவல் நிலையத்திலும் இருந்து இரண்டு பேர் லோயாவின் மரணம் பற்றி இரவே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், தாங்களே இரவில் உடலை நேரில் பார்த்ததாகவும் கூறினர். உடற்கூராய்வு நள்ளிரவுக்கு சற்றுத் தள்ளி நடைபெற்றதாகவும் அவர்கள் கூறினர். குடும்பத்தினர் பெற்ற அழைப்புகளை விடுத்து,  இந்த இருவரின் தகவல்கள் உடற்கூறாய்வு அறிக்கைகள் கூறுவது போல் இறப்பு காலை 6:15 மணிக்கு நடந்திருப்பதாகக் கூறுவது தீவிர சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

நியமிக்கப்படாத பட்டியல், பழங்குடி ஆணையத்தின் பொறுப்புகள் – வன்கொடுமை வழக்குகளை நீர்த்துப் போக செய்கிறதா ஒன்றிய அரசு?

உடற்கூறாய்விற்கு அந்தரங்கமாக இருந்த, மருத்துவக் கல்லூரியிலிருந்து தகவல் தந்தவர்கள், “உடற்கூறாய்வு செய்தது போல உடலை வெட்டி, மீண்டும் தைத்து விடுமாறு” மேலிடத்திலிருந்து தகவல் வந்ததும் தெரியும் எனக் கூறினர். “இதயத்திற்கு இரத்த ஓட்ட பற்றாக்குறை” ஏற்பட்டதே மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறது. மும்பையைச் சேர்ந்த புகழ்பெற்ற இருதய நோய் மருத்துவர் அஸ்முக் ராவத் அவர்களின் கூற்றுப்படி,” வழக்கமாக வயது மூப்பு, குடும்ப மருத்துவ வரலாறு, புகைப்பிடித்தல், உயர் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், சர்க்கரை நோய் ஆகியவைதான் இதய இரத்த ஓட்டம் பற்றாக்குறைக்கு காரணமாக அமையும்,” என்று கூறுகிறார். இது எதுவும் தனது சகோதரருக்கு இல்லை என பியானி குறிப்பிடுகிறார். ” பிரிட்ஜ் 48 வயதானவர், எங்கள் பெற்றோர்கள் 80 மற்றும் 85 வயதுடையவர்கள். அத்துடன் அவர்கள் இருதய நோய் பாதிப்பு ஏதுமின்றி  உடல் நலத்துடன் இருக்திறார்கள். அவர் குடிப்பழக்கம் அற்றவர். பல ஆண்டுகளாக தினமும்  இரண்டு மணி நேரம் மேசைப்பந்து விளையாடி வருகிறார். அவருக்கு இரத்த அழுத்தமோ அல்லது சர்க்கரை நோயோ இல்லை,” என்று கூறுகிறார் பியானி.

தனது சகோதரரின் மரணம் குறித்த அதிகாரபூர்வ மருத்துவ விளக்கத்தை தன்னால் சிறிதும் நம்ப முடியவில்லை என்கிறார் பியானி. ” நானே ஒரு மருத்துவர். பிரிஜ் அமிலத்தன்மை மற்றும் இருமல் போன்ற சிறு பிரச்சனைகளுக்கும் கூட அவர் எனது ஆலோசனையைக் கேட்பார். அவருக்கு இருதய நோய் வரலாறு இல்லை. எங்கள் குடும்பத்தினருக்கும் இல்லை,” என்கிறார் அவர்.

 

www.caravanmagazone .in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

எழுதியவர் : நிரஞ்சன் டாக்லே

 

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்