Aran Sei

உள்ளாட்சிகளில் தொடரும் சாதியப் பாகுபாடு – புறக்கணிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள்

சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டு வந்ததால் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தலித் கிராமபஞ்சாயத்துத் தலைவர் ராஜேஸ்வரி பாண்டி தன்னுடைய பதவியை ராஜினாமா  செய்ய முடிவெடுத்துள்ளதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தலித் ஊராட்சிமன்றப் பிரதிநிதிகள்  தொடர்ச்சியாக அவமதிப்புக்குள்ளாக்கப்பட்டு  வருகின்றனர். அண்மையில்  கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சியில், தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சிமன்றத்  தலைவரை  அவருக்கான இருக்கைகளில் அமரவிடாமல் தரையில் அமரவைத்த நிகழ்வு பரபரப்பைக் ஏற்படுத்தியது. பல்வேறு கட்சிகளிடமிருந்தும் அமைப்புகளிடமிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. ஊராட்சி மன்ற செயலாளர் கைது செய்யப்பட்டார்.

சாதி ரீதியாக மிரட்டிப் பணி செய்யவிடாமல் தடுப்பதால், தான் வகிந்த ஊராட்சி மன்ற தலைவர்  பதவியை ராஜினாமா செய்யப்போவதாகக் கால்பிரவு, தலித் பெண் தலைவர் கூறியுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கால்பிரவு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி பாண்டி. இரண்டுமுறை பொதுத் தொகுதியில் போட்டியிட்டு தோற்ற அவர். இம்முறை தனித்தொகுதியில் போட்டியின்றி தலைவர் பதவிக்குத் தேர்வுச் செய்யப்பட்டவர்.

“ஊராட்சியில் தலைவர் ராஜேஸ்வரிக்கு யாரும் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை, தலித் என்பதால் கடந்த 11 மாத காலமாக ஊராட்சி மன்ற தலைவரைப் புறக்கணித்தே வருகின்றனர்” என ராஜேஸ்வரி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தன்னைப்  பணிசெய்ய விடாமல் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள்  மிரட்டுவதாலும் எந்தப் பொறுப்பும் வழங்காமல் இருப்பதாலும் “பொம்மை”யான பதிவில் இருக்க விரும்பவில்லை என்று கால்பிரவு  ஊராட்சிமன்றத்  தலைவர் ராஜேஸ்வரி வீடியோவில்  தெரிவித்துள்ளார்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்