Aran Sei

‘அதிமுக ஆட்சியில் பன்மடங்கு கடனில் மூழ்கிய போக்குவரத்து துறை’ – ஆர்டிஐயில் தகவல்

மிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கடந்த 10 ஆண்டாக அஇஅதிமுக ஆட்சி செய்த காலகட்டத்தில் பல கோடி ரூபாய் கடனில் முழ்கியுள்ளது என்பது ‘தகவல் அறியும் உரிமை சட்டத்தின்’ (ஆர்.டி.ஐ.) கீழ் தெரியவந்துள்ளது. அந்த தகவலறிக்கையில் வெளிவந்திருக்கும் தகவல்கள் பின்வருமாறு.

சேலம் போக்குவரத்து கழகத்தில் கடந்த 2011ல் ரூ.221 கோடி என்றிருந்த கடன் தொகை, அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 11 மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி, தற்போது இதன் கடன் தொகை சுமார் ரூ.2172 கோடியாக உயர்ந்து உள்ளது.

விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் கடந்த 2011ல் ரூ.227 கோடி என்றிருந்த கடன் தொகை, அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 10 மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது கடன் தொகை சுமார் ரூ.2247 கோடியாக உயர்ந்து உள்ளது.

மதுரை போக்குவரத்து கழகத்தில் கடந்த 2011ல் ரூ.266 கோடி என்றிருந்த கடன் தொகை, அடுத்த பத்தாண்டுகளில் 8 மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது கடன் தொகை சுமார் ரூ.2178 கோடியாக உயர்ந்து உள்ளது.

கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் கடந்த 2011ல் ரூபாய்.339 கோடி என்றிருந்த கடன் தொகை, அடுத்த பத்தாண்டுகளில் 7 மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது கடன் தொகை சுமார் ரூ.2478 கோடியாக உயர்ந்து உள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் கடந்த 2011ல் ரூ.586 கோடி என்றிருந்த கடன் தொகை, அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 5 மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது கடன் தொகை சுமார் ரூ.2695 கோடியாக உயர்ந்து உள்ளது.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் கடந்த 2011ல் ரூ.370 கோடி என்றிருந்த கடன் தொகை, அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 4 மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது கடன் தொகை சுமார் ரூ.1555 கோடியாக உயர்ந்து உள்ளது.

source: puthiyathalaimurai

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்