Aran Sei

தமிழகம் முழுவதும் சிஏஏவுக்கு எதிராக இணையவழி போராட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு

Image Credits: The Indian Express

மிழ்நாடு தவஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் இணையம்வழி போராட்டம் நடைபெற்றும் என்று மாநில துணை தலைவர் பா.அப்துல் ரஹ்மான் தெவித்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (ஜூன் 4), பா.அப்துல் ரஹ்மான் வெளியிட்ட அறிக்கையில், “வெளிநாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்களில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது. இச்சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.” என்று நினைவூட்டியுள்ளார்.

மங்களூர்: சிஏஏ போராட்டத்தின் ஓராண்டு நிறைவு – இன்றும் அச்சத்தில் வாழும் இஸ்லாமியர்கள்

குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் அகதிகளாக   தங்கியிருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்க ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டி குடியுரிமை  வழங்கப்படுவதை கண்டித்து நாளை (ஜூன் 5) சனிக்கிழமை காலை 11 மணி அளவில் வீட்டில் இருந்த படியே தமிழகம் முழுவதும்  கண்டன  பதாகைகளை ஏந்தி  இணையவழி போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும்.” என்று  பா.அப்துல் ரஹ்மான்  தனது அறிக்கையில் அறிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்